விடுதலை சிறுத்தை ஆண்டால் பூனலுக்கு தடை விதிக்கப்படும் – வன்னி அரசு கருத்திற்கு பிக் பாஸ் நடிகை போட்ட ட்வீட்.

0
307
- Advertisement -

ஹிஜாப் விவகாரத்தில் விடுதலை சிறுத்தை கட்சி துணை பொது செயலாளர் வன்னியரசு கூறியதற்கு நடிகை கஸ்தூரி அளித்துள்ள பதில் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கர்நாடகாவில் பெரும்பாலான கல்லூரிகளில் இஸ்லாம் மாணவிகள் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து சில இந்து அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்ற சம்பவம் இந்தியா முழுவதும் பேரதிர்வை ஏற்படுத்தி வருகின்ற சம்பவம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இஸ்லாமிய மாணவ, மாணவிகள் குல்லா, பருதா, புர்கா அணிந்து கல்லூரிக்கு வர கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தது. இருந்தும் இஸ்லாமிய மாணவிகள் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்திருக்கிறார்கள். இதனை அடுத்து வகுப்பறைக்கு செல்ல அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனை எதிர்த்து மாணவிகள் பல வாரங்களாக போராட்டம் நடத்தினார்கள்.

-விளம்பரம்-

பின் இது தொடர்பாக உயர் நீதி மன்றத்திலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தால் நாங்கள் காவி துண்டு அணிந்து வருவோம் என்று கூறி இந்துத்துவா மாணவர்கள் காவி துண்டு அணிந்து வந்தனர். இதனால் கர்நாடக மாநிலம் முழுவதும் மத ரீதியாக பிரச்சனை நிலவியது. பின் மாணவ, மாணவிகள் பொதுவான சீருடையை அணிந்து வர வேண்டும் என்று மாநில அரசு வர உத்தரவிட்டது. இப்படி இருக்கும் நிலையில் சில வாரங்களுக்கு முன் இஸ்லாம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்த நிலையில் இதற்கு பதில் காவி அணிந்து வந்த மாணவர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

- Advertisement -

ஹிஜாப் விவகாரம்:

இதனால் கர்நாடகாவில் இந்துத்துவா மாணவர்களுக்கும், இஸ்லாமிய மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.அப்போது ஏற்பட்ட கலவரத்தில் இஸ்லாமிய மாணவிகள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. உடனடியாக போலீஸ் வந்து லத்தி சார்ஜ் நடத்தி மாணவ, மாணவியரை அப்புறம் படுத்தி இருந்தார்கள். அதுமட்டும் இல்லாமல் இஸ்லாமிய மாணவி ஒருவரை இந்துத்துவா மாணவர்கள் சுற்றி வளைத்து ஜெய்ஸ்ரீராம் என்று கரகோஷம் செய்து இருக்கிறார்கள். ஆனால், அந்த பெண் யாரையும் பார்த்து பயப்படாமல் தனியாக நின்று கையை உயர்த்தி கோஷம் எழுப்பி எனக்கு பயம் இல்லை என்பதை சத்தமாக சொல்லி இருக்கிறார்.

வன்னி அரசு போட்ட பதிவு:

இப்படி சில வாரங்களாகவே நடந்து வரும் இந்தப் பிரச்சனை இந்தியா முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மத ரீதியாக கல்லூரி மாணவர்கள் இப்படி மோதிக்கொள்ளும் சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து அரசியல்வாதிகள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் தங்களுடைய கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அந்த வகையில் பாஜக தலைவர் அண்ணாமலை இதுகுறித்து பேட்டி ஒன்று கொடுத்திருக்கிறார். அதில் அவர், தமிழகமும் இத்தடையை சந்திக்கும் என்று கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-

கஸ்தூரி போட்ட பதிவு:

இவர் இப்படி பேசியது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வந்தது. இதனை தொடர்ந்து விடுதலை சிறுத்தை கட்சி துணை பொது செயலாளர் வன்னி அரசு கூறியது, பிராமணர்களால் அதிகம் பயன்படுத்தப்படும் பூணூல் திருமாவளவன் ஆட்சிக்கு வந்தால் தடை செய்யப்படும் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். இவரின் பதிவிற்கு சோசியல் மீடியாவில் பலரும் நெகட்டிவான கமெண்டுகளை போட்டு வந்திருந்தார்கள். இந்த நிலையில் நடிகை கஸ்தூரி இதுகுறித்து பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர், என்னது பூணூல் அறுப்பா? சனாதன அழிப்பா? பாத்து பேசுங்க, சேகர் ரெட்டி கோவிச்சுக்க போறாரு. உள்ளே செய்வது ஒன்று, வெளியே பேசுவது ஒன்று என்று இல்லாமல் குறைந்தபட்ச மனசாட்சியுடன் நடந்துக்கொள்ளுங்கள்.

கஸ்தூரி டீவ்ட்க்கு பதில் டீவ்ட் போட்ட வன்னியரசு:

உங்களை நம்பும் சமூகத்தினரை ஏமாற்று வார்த்தை பேசி பலிஆடுகளாக்க வேண்டாம் என்று கஸ்தூரி பதிவிட்டிருக்கிறார். இப்படி கஸ்தூரி பதிவிட்டத்தை பார்த்த விடுதலை சிறுத்தை கட்சியின் வன்னிஅரசு பதில் டீவ்ட் போட்டு உள்ளார். அதில் அவர், பூணூல் என்று சொன்னவுடனே எதற்காக இந்த பதற்றம்? பூணூல் என்பது இந்து மத அடையாளமா? அல்லது பார்ப்பனர்களுக்கு மட்டுமான அடையாளமா? ஹிஜாப் மத அடையாளம் என்றால், பூணூல் என்ன அடையாளம்? என்று கேள்வி கேட்டிருக்கிறார். இப்படி இவர்களின் பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் கர்நாடகா பிரச்சனையை தமிழ்நாட்டு பிரச்சினையாக மாற்றி விடுவார்கள் போல? என்று விமர்சித்து வருகிறார்கள்.

Advertisement