விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த தொடரைப் பார்த்துவிட்டு சன் தொலைக்காட்சியில் லட்சுமி ஸ்டோர்ஸ் என்ற தொடரையும் ஆரம்பித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால், இந்த தொடருக்கு இணையாக வெற்றியை காண முடியவில்லை. பாண்டியன் ஸ்டோர்ஸ் trp எகிறி செல்வதற்கு முக்கிய காரணமே இந்த சீரியலில் கதிர் மற்றும் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் குமரன் மற்றும் சித்ரா தான்.
குமரன் மற்றும் சித்ரா இருவரும் ஜோடி நிகழ்ச்சியில் கூட ஒன்றாகி ஆடி இருந்தனர். நடிகை சித்ரா அவர்கள் விஜேவாக தான் அறிமுகமானார். பின் சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர். நடிகை சித்ரா அவர்கள் தொகுப்பாளினி, நடிகை, நடனம், மாடலிங் என பல திறமைகளைக் கொண்டவர். நடிகை சித்ரா அவர்கள் முதன் முதலாக மக்கள் டிவியில் டிவியில் தொகுப்பாளினி ஆனார். அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா, பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்து வந்தார். அதற்குப் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற சீரியலில் நடித்தார். பின்னர் படிப்படியாக பல சீரியலில் நடிக்கத் தொடங்கினார்.
இதையும் பாருங்க : ஐஸ்வர்யா ராய் என்னை பெற்றெடுக்கும் போது அவருக்கு 15 வயது தான் – சர்ச்சையை கிளப்பிய இளைஞர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சித்ரா பிரபல பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது பேசிய அவர், 2019 ஆம் ஆண்டில் தனக்கு ஏற்பட்ட வேதனையான விஷயத்தை பகிர்ந்துள்ளார். அதில், என்னுடைய வளர்ச்சி ஒரு பக்கம் சந்தோஷத்தைக் கொடுத்தாலும் என்னை சுற்றி இருக்கும் பல பேர் தவறாக பேசுகிறார்கள் நீ எல்லாம் ஒரு ஆளா என்று அசிங்கப் படுத்தி இருக்கிறார்கள் என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு நானே காசு கொடுத்து கமெண்ட் போட சொல்வதாக கூறினார்கள்.
இதெல்லாம் பார்க்கின்ற போது மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனால்,, வாழ்க்கையில் அடி வாங்கிய சில பேர் எனக்கு அட்வைஸ் செய்தார்கள் குறிப்பாக சொன்ன அட்வைஸ் பிடித்திருந்தது. என் வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு, இருக்கிறேன் நிறைய தோல்விகளை சந்தித்து இருக்கிறேன். அவமானப்பட்டு இருக்கிறேன் இப்படியெல்லாம் அசிங்கப்பட்டால் தான் மனதளவில் வலிமையாக இருக்க முடியும் என்று கூறினார். அவருடைய அந்த அட்வைஸ் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது என்று கூறியுள்ளார் சித்ரா.