இக்கட்டான சுழலில் freeze டாஸ்கில் கவினை சந்திக்க இன்று உள்ளே சென்ற நபர்கள்.!

0
51240
kavin

கடந்த சில வாரமாக மந்தமாக சென்று கொண்டிருந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது தான் கொஞ்சம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகாமக 80 நாட்களை நிறைவு செய்துள்ளது. கவின் மற்றும் லாஸ்லியா விஷயத்தில் கேள்வி கேட்டு சேரன் ரகசிய அறையில் இருந்து நேற்று வெளியேறி மீண்டும் போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

- Advertisement -

மேலும், பிக் பாஸ் வீட்டில் தற்போது பிரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. இந்த பிரீஸ் டாஸ்க்கின் போது முகெனின் தங்கை மற்றும் அவரது அம்மா பிக் பாஸ் வீட்டில் வந்ததிருந்தனர். மேலும், நேற்றய நிகழ்ச்சியில் லாஸ்லியாவின் தந்தை மற்றும் அவரது அம்மா, தங்கைகள் அனைவரும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருந்தனர்.

இதையும் பாருங்க : இடுப்பில் இருந்து தொடைக்கு மாறிய ரம்யா பாண்டியன்.! வைரலாகும் புகைப்படம்.!

10 வருடம் கழித்து தந்தையை பார்த்த சந்தோஷத்தில் லாஸ்லியா கண்ணீர் விட்டு அழுதார். ஆனால், உள்ளே சென்றவுடன் கவின் விஷயத்தை ஆரம்பித்த லாஸ்லியாவின் தந்தை லாஸ்லியாவை கடுமையாக திட்டி தீர்த்தார். லாஸ்லியாவின் பெற்றோர்களை சமாதானம் செய்து விடலாம் என்று கனவில் இருந்து வந்த கவின் நேற்று மனமுடைந்து போனார்.

-விளம்பரம்-

பிக் பாஸ் வீட்டிற்குள் இன்னும் கவின், ஷெரின், சாண்டி ஆகியோரின் உறவினர்கள் மட்டும் தான் செல்லாமல் இருந்து வருகின்றனர். இதில் கவினின் அம்மா ஏற்கனவே மோசடி வழக்கில் சிக்கி கைதாகி இருப்பதால் அவரை காண அவரது அக்கா மற்றும் தந்தை செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், தற்போது வந்த தகவலின் கவினை சந்திக்க அவரது நண்பர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இன்று சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இது நாளைய எபிசோடில் ஒளிபரப்பபடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கவின், லாஸ்லியா விஷயத்தில் நொந்து போயுள்ள இப்படி ஒரு இக்கட்டான சூழலில் அவரது நண்பர்கள் செல்வது நிகழ்ச்சியில் எதாவது ட்விஸ்ட் ஏற்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement