ரியோவை தொடர்ந்து கவினுக்கு கைகொடுக்கிறாரா சிவகார்த்திகேயன் ? உற்சாகத்தில் கவின் ஆர்மி.

0
3063
kavin-sk
- Advertisement -

பிக் பாஸ் கவின் இப்ப ‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ அடிக்க போகிறார் என்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. சின்னத்திரையில் அதாவது விஜய் டிவியில் 2012 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ‘கனா காணும் காலங்கள்’ என்ற தொடரின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான தொடர்களில் ஒன்றான ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து தூள் கிளப்பினார். இதற்கு பிறகு அவர் சில படங்களில் நடித்தும் வந்தார். இதனை தொடர்ந்து இந்த வருடம் உலக நாயகன் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் தமிழ் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கவின் அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார். மேலும்,இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கவினை பற்றிப் பேசாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு மக்களிடையே பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நட்புக்கு இலக்கணம் கவின் என்று பாராட்டப்படும் அளவிற்கு அவருடைய செயல்கள் இருந்தது.

-விளம்பரம்-
Image

- Advertisement -

இதனைத் தொடர்ந்து கவின்–லாஸ்லியா காதலும் கொடி கட்டி பறந்தது என்றும் சொல்லலாம். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தும் இவர்கள் காதல் குறித்து தற்போது வரை கூட ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றன. மேலும், இவர்கள் இருவரும் ஒன்று சேர வேண்டும் என ரசிகர்கள் கேட்டு கொள்கிறார்கள். இவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் இவர்கள் காதலித்து வருகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. மேலும்,பெற்றோர்கள் சம்மதத்திற்காக காத்திருப்பதாகவும் தகவல் வந்துள்ளன. விரைவில் இவர்கள் திருமணம் குறித்து அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னே கவின் ‘நட்புன்னா என்னனு தெரியுமா’ என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். மேலும், சில பிரச்சனைகளால் இந்த படம் வெளியிடுவதற்கு தாமதமானது. மேலும்,இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : விஜய் தேவர்கொண்டாவை விஜய் சேதுபதி முன்பே அசிங்கபடுத்திய பார்வதி.

இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது. இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு நடிகர் கவினுக்கு சினிமாவில் அடுத்தடுத்து படங்கள் வரிசையாக இருக்கின்றன என்ற தகவலும் வெளிவந்து உள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளார்கள் என்றும் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அவர்கள் நடிப்பில் வெளிவந்த ‘கோலமாவு கோகிலா’ படத்தை இயக்கியவர் நெல்சன். மேலும்,தற்போது நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அவர்கள் ஒரு படம் நடிக்க உள்ளதாக தகவல் வந்துள்ளது. அதோடு நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளிவந்து வெற்றி நடைபோட்ட ‘கனா’ படத்தில் ஹீரோவாக நடித்த தர்சனம் இந்த படத்தில் நடிக்க உள்ளார்.

-விளம்பரம்-
Image

இதனை தொடர்ந்து பிக் பாஸ் கவினும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் வெளிவந்து உள்ளது. மேலும்,சிவகார்த்திகேயன்,கவின்,நெல்சன்,தர்சன் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. ஆகவே சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாக உள்ள “SK 18” படத்திலும், அதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கவின் ஹீரோவாகவும் நடிக்க உள்ளார் என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த ரியோவை சிவகார்த்திகேயன் ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சிவகார்த்திகேயன் மற்றும் கவின் இருவருமே திருச்சியை சேர்ந்தவர்கள் என்பதும் இங்கே கவனிக்கப்படவேண்டிய ஒன்று.

Advertisement