விஜய் தேவர்கொண்டாவை விஜய் சேதுபதி முன்பே அசிங்கபடுத்திய பார்வதி.

0
18622
vijay-devarkonda
- Advertisement -

சமீபத்தில் தான் சினிமா ரவுண்ட் டேபிள் பேட்டி ஒன்று நடைபெற்றது. இதில் சினிமா நடிகர்கள் பல பேர் கலந்து கொண்டார்கள். அதில் தீபிகா படுகோன், ரன்வீர் சிங், ஆயுஷ்மான் குர்ரானா, மனோஜ் பாஜ்பாய், விஜய் தேவரகொண்டா, ஆலியா பாட் , பார்வதி மற்றும் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மேலும், இந்த பேட்டியில் இவர்கள் தங்களுக்கு சினிமாவின் மீதான புரிதல் குறித்தும், சினிமாவின் தற்போது நிலை குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்கள். இதை தொடர்ந்து மலையாள நடிகை பார்வதி அவர்கள் பேசியது, திரைப் படங்களில் வரும் கதாபாத்திரங்கள் மக்களிடையே எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும், மேலும்,அந்த கதாபாத்திரங்கள் எப்படி இயல்பாக மக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்றும் பேசினார். குறிப்பாக, அவர் அர்ஜுன் ரெட்டி மற்றும் ஆங்கில திரைப்படம் ஜோக்கர் படத்தை பற்றி பேசி உள்ளார். அது மட்டுமில்லாமல் பார்வதி அர்ஜுன்ரெட்டி படத்தை தாறுமாறாக வறுத்து எடுத்தடுத்தார் என்றும் சொல்லலாம்.

-விளம்பரம்-

சினிமாக்கள் பெண் வெறுப்பை கொண்டாடுவதும், அதனைப் பிரதிபலிப்பதும் குறித்து கூறியிருந்தார். அதில் அவர் கூறியது, சமூகத்தில் உள்ள பெண்கள் மீதான வெறுப்பு சினிமாக்களில் பிரதிபலிக்கிறார்கள். மேலும், சமூகத்துக்கும், சினிமாவிற்கும் மெல்லிய கோடு தான் இருக்கிறது. பெண் மீது வெறுப்பு உள்ள ஒரு ஆண் சினிமாவில் பெண்ணிடம் அத்துமீறுகிறார் என்றால் அதை பார்வையாளர்களிடம் கைத்தட்டல் வாங்க வைக்கிறது. இதனால் பார்வையாளர்களும் இது தான் சரி என்று மனதில் வாங்கி கொள்கிறார்கள். மேலும், சினிமா என்பது வசனங்கள், நல்ல கதையாக இருக்க வேண்டும். மேலும்,சினிமா மூலம் பார்வையாளர்களுக்கு சரியான விஷயத்தை புகுத்த வேண்டும். இந்த மாதிரியான படங்கள் மூலம் இதனை எழுதிய எழுத்தாளர், இயக்குனர் ஆகியோர்கள் பெண் வெறுப்பை கொண்டாடுகிறார்கள் என்று தான் பொருள்.

இதையும் பாருங்க : நீ கொழந்தமா, இப்படிலா போஸ் வேண்டாம். விஸ்வாசம் அஜித் மகளுக்கு ரசிகர்கள் அட்வைஸ்.

- Advertisement -

மேலும், அதே சமயத்தில் இது போன்று ஒரு பெண் வெறுப்பு காட்சியை கைதட்டல் வாங்காமல் பார்வையாளர்கள் மத்தியில் இது சரியா? தவறா? என்ற கேள்வியை எழுப்பினால் அது சரியான சினிமாவாகவும், பெண் வெறுப்பை பிரதிபலிக்கும் சினிமாவாகவும் இருக்கும். இதனை தொடர்ந்து ஆங்கிலப் படமான ஜோக்கர் திரைப்படத்தில் நடிகர் பல கொலைகளை செய்வதால் அந்த கதாபாத்திரத்தை பின் தொடர வேண்டுமா? இல்லை பாராட்டப்பட வேண்டுமா? என்று தெரியவில்லை. மேலும், அர்ஜுன் ரெட்டி படத்தில் காதலர்களுக்கு இடையில் கன்னத்தில் அறைந்து கொள்வதை காட்டுகிறார்கள். அது யூடியூபில் சென்று மக்கள் பல பேர் லைக் செய்து ஆதரவு செய்து வந்தார்கள். அப்படி என்றால் நீங்கள் வன்முறையை தூண்டுகிரீகள் என்று தானே அர்த்தம். சினிமா மூலம் நல்ல விஷயங்களை மக்களுக்கு கொண்டு செல்லுதல் வேண்டுமே தவிர பெண் வெறுப்பு, கலவரம்,கொலை போன்ற விஷயங்களை துண்டக் கூடாது என்று பார்வதி கூறினார்.

மேலும், பார்வதியின் இந்த தைரியமான பேச்சு இணையதளத்தில் வேற லெவல்ல பட்டையை கிளப்பி வருகிறது. மேலும், நெட்டிசன்கள் பார்வதிக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் போலியாக புகழ்வதை விட மனதில் உள்ளதை தெளிவாக பேசும் பார்வதி என்றும் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெடி படம் தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. அதோடு ஒரு முக்கியமான விஷயம் என்ன என்று பார்த்தால் பார்வதி பேசும் இந்த ரவுண்ட் டேபிள் பேட்டியில் அர்ஜுன் ரெட்டி நடிகர் விஜய் தேவரகொண்டாவும் பங்கேற்றார்.

-விளம்பரம்-
Advertisement