விக்கி – நயன் தயாரிப்பில் கவின் நடிக்கும் ‘ஊர் குருவி’ படத்தில் கவினுக்கு ஜோடி இந்த சீரியல் நடிகை (ஜூனியர் நயன்தாரானு சொல்றாங்க)

0
2235
kavin
- Advertisement -

ஊர்க்குருவி படத்தில் கவினுக்கு ஜோடியாகிறார் பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக கவின் திகழ்ந்து வருகிறார். இவர் சின்னத்திரையில் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார். அதற்கு பிறகு இவர் குறும் படங்களில் நடிக்க தொடங்கினார். அதன் மூலம் இவர் கனா காணும் காலங்கள் என்ற தொடரில் நடிகராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து சரவணன் மீனாட்சி என்ற தொடரில் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்த்தார். பின்பு 2017 ஆம் ஆண்டு சத்ரியன் என்ற திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் நுழைந்தார்.

-விளம்பரம்-
Kavin joins with Vignesh Shivan for 'Oor Kuruvi' – Afternoon

பிறகு 2019 ஆம் ஆண்டு நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படம் மூலம் கதாநாயகனாக சினிமாவில் தடம் பதித்தார். இந்த படம் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது இயக்குனர் வினித் வரப்பிரசாத் இயக்கத்தில் கவின் நடிப்பில் லிப்ட் படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தை லிப்ரா புரொடக்ஷன் தயாரித்தது. இந்த படம் ஐடி கம்பெனியில் நடக்கும் திகில் சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவானது.

இதையும் பாருங்க : கலைஞர் செய்த உதவி, கமலின் மன்னிப்பு, ஸ்டாலினின் ஆட்சி, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் – மனம் திறந்த வடிவேலு.

- Advertisement -

மேலும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது கவின் அவர்கள் ‘ஊர்குருவி’ எனும் படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தை நயன்தாரா– விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் அருண் இயக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக போகும் நடிகை குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

Avneet Kaur's Transformation To Princess Yasmine | Aladdin | Sab TV

ஊர் குருவி படத்தில் கவினுக்கு ஜோடியாக பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை காவியா அறிவுமணி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. காவ்யா பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், இவரை சின்ன திரை வட்டாரத்தில் ஜூனியர் நயன்தாரா என்று தான் அழைக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement