கலைஞர் செய்த உதவி, கமலின் மன்னிப்பு, ஸ்டாலினின் ஆட்சி, நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் – மனம் திறந்த வடிவேலு.

0
1401
vadivelu
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் காமெடி கிங்காக திகழ்பவர் வைகைப்புயல் வடிவேலு. சோசியல் மீடியா என்றாலே இவருடைய காமெடியும், புகைப்படங்களும் தான் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வருகிறது.
இயக்குனர் சங்கருக்கும் இவருக்கும் இருந்த பிரச்சினை சுமூகமாக முடிவடைந்ததை தொடர்ந்து வடிவேலு அவர்கள் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார். சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் காமெடி படம் தான் நாய் சேகர் ரிட்டன்ஸ். மேலும், பல ஆண்டுகளுக்கு பிறகு வடிவேலுவை திரையரங்கில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கிறார்கள். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் வடிவேலு அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார்.

-விளம்பரம்-
Adithangi Memes - Legend😔 #trendingmemes #memes #vadivelu #stalin #dmk # kalaignar #mk | Facebook

அதில் அவர் கூறியது, உலகமே கொரோனாவினால் திண்டாடிக் கொண்டிருக்கும் போது என்னுடைய பிரச்சினை எல்லாம் சின்னதாக தான் தெரிந்தது. அப்பதான் லண்டனில் இருக்கிற சுபாஷ்கரன் சாருக்கு நான் போன் பண்ணி என்னோட பிரச்சனை சொன்னேன். அவரும் ஊருக்கு வந்து உன் பிரச்சினையை தீர்த்து வைக்கிறேன் என்று சொன்னார். சொன்ன மாதிரியே அவர் என் பிரச்சனையை தீர்த்து வைத்தார். சுபாஸ்கரன் ஐயா தான் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்று அறிவித்தார். அதுவரைக்கும் என்னுடைய அம்மாவும், மனைவியும் தான் என்னை உள்ளங்கையில் வைத்து பார்த்துக் கொண்டார்கள். இப்போது கூட மதுரைக்கு போய் என் அம்மாவை பார்த்து விட்டு மறுபடியும் நடிக்கப் போறேன்னு சொல்லிட்டு தான் வந்தேன். எப்ப எனக்கு மனசு கஷ்டமாக இருந்தாலும் என் ஆத்தாவை பார்க்கப் போய்விடுவேன் என்று கூறினார்.

- Advertisement -

கமல் சாரை குறித்து சில வார்த்தைகளை கூறுங்கள் என்று கேட்டதற்கு வடிவேலு கூறியது, அவர் ஒரு நல்ல மனிதர். சமீபத்தில்கூட அன்புமணி ராமதாஸ் மகள் கல்யாணத்தில் கமல் சாரைப் பார்த்தேன். மறுபடியும் நீ சினிமாவுக்கு வருவது ரொம்ப சந்தோஷம். நீ இன்னும் பெருசா வரணும். இந்த பிரச்சனையை நானே எடுத்துக் கொண்டு சரி பண்ணி இருக்கணும். நான் பேசாமல் இருந்துட்டேன். என்னை மன்னித்துவிடு என்று சொன்னார். நான் உடனே இதெல்லாம் நீங்க சொல்ல வேணாம் என்று அவர் கையைப் பிடித்தேன். சீக்கிரம் நம்ம படத்துக்கும் வந்துடுங்க காத்துட்டு இருக்கேன் என்று சொல்லிட்டு போனார். எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது.

பின்பு கலைஞருடன் உங்களுடைய அனுபவம் குறித்து சொல்லுங்கள் என்று கேட்டதற்கு வடிவேலு கூறியது, புலிகேசி படம் எடுத்து முடித்ததும் ப்ளூகிராஸ் பிரச்சனை இருந்தது. அப்போது சர்டிபிகேட் வாங்க தாமதமானது. இது தொடர்பாக நான் கலைஞர் அய்யாவை சந்திக்கப் போனேன். அவரிடம் ப்ளூகிராஸ் பிரச்சனை பற்றி சொன்ன உடனே கலைஞர் ஐயா டெல்லிக்கு போன் பண்ணி இதை சரி பண்ணு என்று சொன்னார். ஒரு போனிலேயே என்னுடைய பிரச்சனையை தீர்த்து வைத்தார். புலிகேசி படம் வெளிவருவதற்கு முக்கிய காரணமே கலைஞர் ஐயா தான் என்று கூறினார்.

-விளம்பரம்-

முதலமைச்சர் ஸ்டாலின் பற்றி சொல்லுங்கள் என்று கேட்டதற்கு வடிவேலு கூறியது, மக்களிடம் ஒரு சந்தோசம், நம்பிக்கை இருக்கு என்றால் அதற்கு காரணம் ஐயா ஸ்டாலின் தான். ஸ்டாலின் அவர்கள் நடைப்பயிற்சி செய்யும்போது கூட மக்களை சந்தித்து பேசுகிறார். தேவையில்லாமல் ஒரு வார்த்தைகூட பேசியதே கிடையாது. அவர் வந்ததும் கொரோனா பிரச்சினையே ஒழிந்தது. இது மிக பெரிய சாதனை. மக்கள் எது பேசினாலும் அதை காது கொடுத்து அவர்களுடைய குறையை தீர்த்து வைக்கிறார். சரியான அமைச்சர்களை போட்டு தமிழகத்தை நன்முறையில் கொண்டு செல்கிறார். எல்லோரையும் அரவணைத்து பேசுவதில் ஸ்டாலின் முதலில் நிற்கிறார். இந்த நல்லாட்சி அப்படியே நல்லபடியாக நடக்க விடுங்கள். நாய் சேகர் ரிட்டன்ஸ் பார்த்து வயிறு குலுங்க சிரிங்க என்று வேடிக்கையாக தன்னுடைய பேட்டியை முடித்து கொண்டார்.

Advertisement