கவினுடன் ஜோடியாக சேர்ந்த குக்கு வித் கோமாளி பிரபலம் – அட செம ஜோடி தான்.

0
1528
kavin
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நடிகர் கவின். இவர் ஆர்ஜேவாக தன்னுடைய பயணத்தை தொடங்கினார். இவருக்கு சினிமா துறையின் மீது இருந்த ஆர்வத்தினால் தன் நண்பர்களின் உதவியால் சின்ன சின்ன ஷார்ட் பிலிமில் நடித்தார். பிறகு குறும்படங்களின் மூலமாக இவருக்கு தொலைக்காட்சிகளில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. இவர் முதலில் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ” கனா காணும் காலங்கள்” சீரியலில் நடித்தார். அதற்கு பின் பிரபலமான சீரியல் ஆன சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து ரசிகர்களிடையே அதிக வரவேற்ப்பையுயும், அன்பையும் பெற்றார்.

-விளம்பரம்-

பிறகு கவின் சினிமாவில் நடிக்க தொடங்கினார். 2015ஆம் ஆண்டு கவின் அவர்கள் ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கவின் தனெக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்த்தார்.2012 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் நடித்த பீட்சா படத்தின் மூலம் தான் கவின் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார்.

இதையும் பாருங்க : இடுப்புக்கு மேல ஒன்னு கழுத்துக்கு கீழ ஒன்னு – டாட்டூவை அப்பட்டமாக காட்டிய சித்தி 2 சீரியல் நடிகை

- Advertisement -

இதனைத் தொடர்ந்து இவர் 2015 ஆம் ஆண்டு விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த இன்று நேற்று நாளை படத்தில் நடித்திருந்தார். மேலும், இவர் முதன் முதலாக ஹீரோவாக நடித்தது ‘நட்புன்னா என்ன தெரியுமா’ படத்தின் மூலம் தான், இந்த படத்திற்கு பின்னர் இவர், லிப்ட் படத்தில் கமிட் ஆனார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிகில் பட புகழ் அமிர்தா ஐயர் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் பணிகள் எப்போதோ துவங்கிய நிலையில் இந்த படத்தை பற்றிய வெளியீட்டு விவரம் இன்னும் வெளியாகவில்லை. இப்படி ஒரு நிலையில் நடிகர் கவின் நடிக்கும் அடுத்த படத்தில் குக்கு வித் கோமாளி புகழ் பவித்ரா லட்சுமி நடித்து உள்ளாராம். இந்த படத்தின் ஷூடிங் ஸ்பாட்டில்எடுத்த புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பவித்ரா.

-விளம்பரம்-
Advertisement