விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோலாகலமாக நிறைவடைந்தது. பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் கவின். கவின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்னர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியலில் நடிகராகவும், சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். ஆனால், இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது சரவணன் மீனாட்சி வேட்டையன் கதாபாத்திரம் தான். மேலும், கவின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் இவருக்கு பல்வேறு ஆதரவுகள் இருந்து வந்தது.
ஆனால், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 100 வது நாளில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். பிக் பாஸ் அறிவித்த 5 லட்ச ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு கவின் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய கவின், கடந்த இரண்டு வருடங்களாக என்னைத் தொலைத்த நான் இந்த வாய்ப்பின் மூலம் என்னை மீண்டும் கொண்டு வந்து விடலாம் என்று நினைத்தேன். நான் நம்பிக்கையோடு தான் உள்ளே சென்றேன். அங்கே கிடைக்கும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்தி என்னை நான்நிரூபிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதைத் தவிர நான் எதையும் நினைக்கவில்லை. எனக்கு கொஞ்சம் பணமும் கொஞ்சம் பிரபலம் மட்டும்தான் இதன் மூலம் நான் எதிர்பார்த்தேன்.
இதையும் பாருங்க : பிக் பாஸிற்கு பின் முதன் முறையாக கவின் குறித்து ட்வீட் செய்த லாஸ்லியா.!
ஆனால், தற்போது எனக்கு கிடைத்த பிரபலத்தை என்னால் முழுமையாக அனுபவிக்க முடியவில்லை என்று தான் நினைக்கிறேன். எனக்கு இருக்கும் பிரச்சனைகளில் தற்போது அதனை என்னால் அனுபவிக்க முடியவில்லை. நீங்கள் எனக்கு காட்டிய அன்பிற்கு பதிலளிக்க முடியாத நிலையில் நான் இருக்கிறேன். எனக்கு நீங்கள் கொடுத்த அனைத்து அன்பிற்கும் நன்றி. என்று தனது சமூக வலைதளத்தில் மிகவும் உருக்கமான பதிவினை பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய கவின் முதலில் தனது தாயின் நிலைமையை அறிந்து நேராக தனது தாயையும் அவரது உறவினர்களையும் பார்த்துள்ளார் என்று செய்துகள் வெளியாகி இருந்தது. கவின் தனது தாயை ஜாமினில் எடுத்துள்ளதாகவும், மேலும் பணத்தை ஏமாற்றியதாக கூறி வழக்கு தொடர்ந்த நபர்களுக்கு 29 லட்ச ரூபாயை அளிப்பதாக உத்தரவு அளித்துள்ளதாவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டியின் போது அணைத்து போட்டியாளர்களின் குடும்பத்தினரும் வந்திருந்தனர்.
ஆனால், கவினின் குடுப்பதில் இருந்து யாரும் வரவில்லை. என்னதான் கவின் தனது தாயை சிறையில் இருந்து காப்பற்றினார் என்று செய்திகள் வந்தாலும். அவரது தாயின் நிலைமை என்ன ஆனது என்று கவினின் ரசிகர்கள் மிகவும் கவலை பட்டு வந்தனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு கவின் சென்ற போது கூட லாஸ்லியா முதலில் கவினின் குடும்பத்தினரை பற்றி தான் கேட்டார். அதற்கு கவின் எல்லோரும் நலம் என்று கூறி இருந்தார். இந்த நிலையில் கவின் சமீபத்தில் தனது தாய் மற்றும் பாட்டியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் கவினின் ரசிகர்கள் மிகுந்த நிம்மதியுலும் மகிழ்ச்சியிலும் ஆழ்ந்துள்ளனர்.