விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று மாதத்திற்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த ஞாயிற்று கிழமையுடன் (அக்டோபர் 6) நிறுவடைந்தது. 16 போட்டியாலர்கள் கலந்த கொண்ட இந்த நிகழ்ச்சியில் 12 வெளியேற்றபட்ட நிலையில் முகென்,சாண்டி,லாஸ்லியா, ஷெரின் என்று 4 போட்டியாளர்கள் மட்டும் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். இந்த சீசனில் வெளிநாட்டில் இருந்து மூன்று போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.
அந்த வகையில் மலேசியாவை சேர்ந்த முகென் இலங்கையை சேர்ந்த லாஸ்லியா மற்றும் தர்ஷனும் அதில் அடக்கம். இதில் லாஸ் லியா பல்வேறு இளசுகளின் உள்ளதை கொலைகொண்டார். இவரது அழகான தோற்றம் காரணமாக இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த 24 மணி நேரத்திலேயே இவருக்கு சமூகவலைதளத்தில் ஆர்மிக்கால் கூட உருவானது. ஆரம்பத்தில் யாரிடமும் அவ்வளவாக பேசாத லாஸ்லியா ரசிகர்களை அவ்வளவாக கவரவில்லை ஆனால் நாட்கள் செல்ல செல்ல இவரது உண்மையான குணம் வெளியே வரத் தொடங்கியது. பிக்பாஸ் வீட்டில் இவர் சேரனை தனது தந்தையை போல பாவித்து நடந்து வந்தார். மேலும், சேரனுக்கு அடுத்தபடியாக கவினிடம் மிகவும் நெருக்கமாக பழகி வந்தார்.
இதையும் பாருங்க : விஜய் மற்றும் அஜித் குறித்து ஒரே வார்த்தையில் பதில் அளித்த ஷாருக்கான்.!
இவர் இதுவரை பெரிய சர்ச்சையில் சிக்க வில்லை என்றாலும் இவருக்கு சாக்க்ஷிக்கும் கவின் விஷயத்தில் கொஞ்சம் முட்டிக்கொண்டது கொண்டது ஆனால் இவருக்கு உறுதுணையாக கவின் எப்போதும் இருந்துவந்தார். அதேபோல கவின் விஷயத்தில் யாராவது குறை சொன்னால் உடனே பொங்கி விழுந்து விடுவார் அந்த வகையில் மதுமிதா கவின் குறித்து பேசியபோது அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் லாஸ்லியா. அப்போதுதான் லாஸ்லியாவின் மற்றுமொரு முகத்தை ரசிகர்களும் கண்டனர் .மேலும், பிக் பாஸ் வீட்டில் இருக்கும் பெரும்பாலான போட்டியாளர்கள் இவரை பட்டாம்பூச்சி போல் பாவித்து வந்தனர்.
இறுதி போட்டியில் பேசிய லாஸ்லியா, அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். குறிப்பாக கவினுக்கு நன்றி எல்லாம் சொல்ல முடியாது. நான் வெற்றி பெற வேண்டும் என்று திட்டம் எல்லாம் கூட போட்டார் என்று கூறி இருந்தார் லாஸ்லியா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் இவர்கள் இணைந்து படம் அல்லது சீரியலில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். அதே போல இவர்கள் இருவரும் சந்தித்து புகைப்படத்தை வெளியிட வேண்டும் என்றும் ஆசை பட்டு வந்தனர்.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் லாஸ்லியா, கவின் குறித்து மறைமுகமாக பதிவு ஒன்றை செய்துள்ளார். சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள லாஸ்லியா, எதிர்பாராததை எதிர்பாருங்கள், மிக்க நன்றிகள் விஜய் டிவி, கமல் சார், Game Changer என்று. பதிவிட்டுள்ளார் இறுதி போட்டியின் போது கமல் சேரன், வனிதா, ஷெரின், தர்ஷன், கவின் ஆகியோருக்கு சில விருதுகளை வழங்கி இருந்தார். அப்போது கவினுக்கு Game Changer என்ற விருதை வழங்கினார். மேலும், கவின் தான் 100 வது நாளில் வெளியேறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, லாஸ்லியா Game Changer என்று குறிப்பிட்டுள்ளது கவின் தான் என்று ரசிகர்கள் சுலபமாக புரிந்து கொண்டனர்.