பிக் பாஸ் கவின் என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் கவின். இவர் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார். அதற்கு பிறகு இவர் குறும் படங்களில் நடிக்க தொடங்கினார். அதன் மூலம் இவர் விஜய் தொலைக்காட்சியில் 2011 ஆம் ஆண்டு ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற தொடரில் நடிகராக அறிமுகமானார். அதனை தொடர்ந்து சரவணன் மீனாட்சி என்ற தொடரில் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சேர்த்தார்.
பின்பு 2017 ஆம் ஆண்டு சத்ரியன் என்ற திரைப்படத்தில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் நுழைந்தார். பிறகு 2019ஆம் ஆண்டு நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக சினிமாவில் தடம் பதித்தார். இந்த படம் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. பின் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கவின் பங்குபெற்று பெற்றிருந்தார். இந்த நிகழ்ச்சியில் இவருக்கும் லாஸ்லியாவுக்கும் இடையே நடந்த காதல் விவகாரம் அனைவருக்கும் தெரிந்ததே.
இதையும் பாருங்க : நீச்சல் உடை போன்ற உடையில் ‘செல்லம்மா’ பாடல் புகழ் ஜோனிதா. இவர் இப்படி ஒரு கிளாமர் பேர்வழியா.
அப்போது சோசியல் மீடியாவை திறந்தால் போதும் கவிலியா குறித்த வீடியோக்கள் தான் அதிகம் வெளிவரும். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவர்கள் காதல் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. இந்த நிலையில் தற்போது கவின் அவர்கள் பேட்டி ஒன்றில் லாஸ்லியா குறித்து பேசியுள்ளார். தற்போது இயக்குனர் வினித் வரப்பிரசாத் இயக்கத்தில் கவின் நடிப்பில் லிப்ட் படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தை லிப்ரா புரொடக்ஷன் தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக அமிர்தா ஐயர் நடித்து இருக்கிறார். இந்த படம் ஐடி கம்பெனியில் நடக்கும் திகில் சம்பவங்களை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ளது.
வீடியோவில் 8 நிமிடத்தில் பார்க்கவும்
இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் குறித்து தற்போது கவின் அவர்கள் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் அவரிடம் லாஸ்லியா குறித்து கேட்டதற்கு கவின் அவர்கள் கூறியது, நான் லாஸ்லியா நடித்த பிரண்ட்ஷிப் படத்தை பார்க்கவில்லை. ஏன் என்றால் அப்போது நான் என்னுடைய பட சூட்டிங்கில் பிஸியாக இருந்தேன். எங்களுக்குள் எந்த ஒரு பேச்சு வார்த்தையும், போன் கால் கூட எதுவும் இல்லை. அவரவர் வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறோம் என்று கூறியுள்ளார்.