பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்த வரை நெட்டிசன்கள் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார்கள் என்றால் அது மிகையில்லை,இதனை உணர்ந்த இந்த பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர்கள் வரும் போதே தங்களுக்கென ஆர்மி என்று சொல்லக்கூடிய ரசிகர்கள் குழுவை சமூக வலைத்தளங்களில் உருவாக்கிவிட்டு தான் வருகிறார்கள்.
அந்த வகையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்றுள்ள போட்டியாளர்கள் அதிக ரசிகர்களை கொண்டவர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் கவின். இதற்கு முக்கிய காரணமே இவர் விஜய்டிவி பிரபலம் என்பதும், மேலும் இவர் நடித்த சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையன் என்ற கதாபாத்திரத்தின் மூலமும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறாரகள் என்பது தான் .
இதையும் பாருங்க : டோஸ் விட்ட ஷெரின்.! ஜூட் விட்ட வனிதா.! இன்னிக்கும் ஒரு பஞ்சாயத்து இருக்கு.!
இதனால் சமூகவலைதளத்தில் இவருக்கென்று தனிப்பட்ட பல்வேறுஆர்மிகளும் உள்ளது. கவின் இதுவரை பலமுறை நாமினேஷனில் இடம் பெற்றுள்ளார். இவர் இடம் பெற்ற ஒவ்வொரு முறையும் இவர் தான் போட்டியில் முதல் இடத்தில் இருந்து வந்தார். அதிலும் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கவின் தாயார் கைது செய்யப்பட்டபோது கவின் ஆர்மி #Westandforkavin என்ற ஹேஷ் டேகை சமூக வலைதளத்தில் உருவாக்கினர். அந்த வகையில் #வெற்றிமகன்கவின் என்ற ஹேஷ் டேகை உருவாக்கியுள்ளனர்.
இந்த நிலையில் இந்த வாரமும் கவின் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளார். ஆனால், இந்த முறையும் கவின் தான் அதிகப்படியான வாக்குகளை பெற்று முதலிடத்தில் இருக்கிறார். இதனால் கவின் ரசிகர்கள் சமூகவலைதளத்தில் வெற்றி மகன் கவின் என்ற ஹேர்ஸ்டைல் உருவாக்கினர். இந்தஹேஷ்டேக் தற்போது இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. அதே போல இந்த வாரம் கவினுக்கு தனிப்பட்ட முறையில் நான்கு லட்சம் வாக்குகள் விழுந்துள்ளது. இதுவரை எந்த ஒரு போட்டியாளர்களுக்கும் இந்த சீசனில் இவ்வளவு வாக்கு எழுந்தது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.