டோஸ் விட்ட ஷெரின்.! ஜூட் விட்ட வனிதா.! இன்னிக்கும் ஒரு பஞ்சாயத்து இருக்கு.!

0
3394
Sherin
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வனிதா, ரீ என்ட்ரி கொடுத்த நாள் முதலே போட்டியாளர்கள் மத்தியில் பல்வேறு சண்டைகளை ஏற்படுத்தி வருகிறார். வந்த முகென் குறித்து எதேதோ சொல்லி அபிராமி மற்றும் முகென் இருவருக்கும் சண்டையை ஏற்படுத்தி விட்டார். மேலும், வகையில் நேற்றயா நிகழ்ச்சியில் ஷெரின் மற்றும் தர்ஷன் உறவை கள்ளத்தொடர்பு என்று மக்கள் நினைப்பார்கள் என்று வனிதா கூறியதால் ஷெரின் மிகவும் கோபப்பட்டார்.

-விளம்பரம்-

இதனால் வனிதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் ஷெரின். தர்ஷனுக்கு ஏற்கனவே ஒரு காதலி இருக்கிறார் என்றும் அப்படி இருக்கும் போது நீ பழகினால் மக்கள் அப்படி தான் நினைப்பார்கள் என்றும் கூறியிருந்தார் வனிதா. இதனால் கடுப்பான ஷெரின் வணிதாவிடம் சண்டை போட்டு பேசாமல் இருந்து வருகிறார்.

இதையும் பாருங்க : படுக்கையில் படு மோசமான ஆடையில் போஸ் கொடுத்த அவன் இவன் நடிகை.!

- Advertisement -

இந்த நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோவில் சேரனிடம் வனிதா, உங்கள் அணியில் இருந்து ஒரு ஆள் வேல பண்ணனும் என்று மறைமுகமாக ஷெரீனை குறிப்பிடுகிறார். அப்போது ஷெரின் தர்ஷனிடம் பேசி கொண்டு இருக்கிறார்.

வனிதா இப்படி சொன்னதும் மீண்டும் வரும் ஷெரின், இது ஒன்னும் ஜெயில் இல்ல அவங்க ஒன்னும் வார்டன் கிடையாது என்று கூறுகிறார். எனவே, இன்றைய நிகழ்ச்சியில் ஷெரின் மற்றும் வனிதா இருவருக்கும் சண்டை வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement