பிகில் பட நடிகைக்கு வீடியோ கால் செய்து பிறந்தநாள் வாழ்த்து சொன்ன கவின். வைரலாகும் புகைப்படம்.

0
1285
kavin

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் நடிகர் கவின். இவர் ஆர்.ஜேவாக தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார். பின்னர் சிறு சிறு ஷார்ட் பிலிம்களில் நடித்தார். பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் சீரியலில் நடிக்கத் தொடங்கினார். அதற்கு பிறகு பிரபலமான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்தார். இந்த சீரியலின் மூலம் தான் இவருக்கு சினிமாவில் படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. மேலும், இவர் நட்புன்னா என்னன்னு தெரியுமா என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார். அதனைத் தொடர்ந்து இன்று நேற்று நாளை, முடிசூடா மன்னன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் கவின் அவர்கள் பிரபல நடிகையுடன் வீடியோ கால் செய்து பிறந்தநாள் வாழ்த்து சொல்லியுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது கவின் அவர்கள் லிப்ட் என்ற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். அந்த படத்தில் ஹீரோயினாக பிகில் புகழ் அம்ரிதா அய்யர் நடித்துள்ளார். இன்று அம்ரிதாவின் பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் பலர் சோசியல் மீடியாவில் வாழ்த்துகளை கூறி வந்துள்ளனர்.

- Advertisement -

அந்த வகையில் நடிகர் கவினும் அம்ரிதாவுக்கு போனில் வீடியோ கால் பேசி மூலம் ஸ்பெஷலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதோடு அந்த வீடியோ கால் பேசியதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து ட்விட்டரில் பதிவிட்டும் வாழ்த்து கூறியுள்ளார் கவின். அதில் அவர் கூறியது,ஹேப்பி பொறந்த நாள் பட்டி. ஸ்பாட்ல செம போகஸ் உடன் இருந்ததால் ஒரு போட்டோ கூட எடுக்கல நாங்க.

இப்போ தான் வேலை இல்லையே அதான் கஷ்டப்பட்டு வீடியோ கால்ல எடுத்தேன் என்று கூறியுள்ளார் கவின். வினீத் வீரபிரசாத் இயக்கியுள்ள படம் தான் லிப்ட். இந்த படம் முழுக்க முழுக்க த்ரில்லான பாணியில் இருக்கும் என கூறப்படுகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கவின் நடிக்கும் முதல் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தி உள்ளது.

-விளம்பரம்-
Advertisement