கடைசி வார நாமினேஷன் – நான் அந்த அளவு கேவலமானவன் இல்லை. ரியோ புலம்பல்.

0
2058
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசன் 12 வாரங்களை கடந்து 13 வது வாரத்தை நிறைவு செய்து இருக்கிறது இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,சுசித்ரா, சம்யுக்தா, ஜித்தன் ரமேஷ், நிஷா, சனம் ஷெட்டி ,அர்ச்சனா ஆகிய என்று 8 பேர் வெளியேறி இருக்கின்ற நிலையில் கடந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் அனிதா சம்பத் வெளியேறி இருந்தார். , இந்த சீசன் நிறைவடைய இன்னும் ஒரு சில வாரங்களில் தான் எஞ்சி இருக்கிறது. இதனால் தான் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் கூட டபுள் எவிக்ஷன் நடைபெற்றது. அதே போல இத்தனை வாரங்களை கடந்தாலும் பிக் பாஸ் வீட்டில் இதுவரை சுவாரசியமான டாஸ்ககும் கொடுக்கப்படவில்லை.

-விளம்பரம்-

இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷன் அடைப்படையில் ஆஜீத், சோம், கேப்ரில்லா, ஷிவானி, ரம்யா ஆகியோர் நாமினேட் ஆகி இருக்கிறாரகள். இந்த வாரம் ஷிவானி அல்லது ஆஜீத் வெளியேற அதிக வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதிலும் Freeze டாஸ்க்கின் போது ஷிவானியின் அம்மாவே ஷிவானி கேம் ஆடிய லட்சணத்தை பற்றிய கூறியதை கேட்ட பின்னர் ஷிவானிக்கே தான் தான் வெளியேறிய போவதாக முடிவே செய்துவிட்டார்.

- Advertisement -

கடந்த சனிக்கிழமை சென்ற வாரம் ஆரி மற்றும் பாலா இருவருக்கும் நடைபெற்ற பிரச்சனை குறித்து கமல் விசாரித்து இருந்தார். இதில் பாலாவை வறுத்தெடுத்துவிட்டார் கமல். அதே போல ரம்யாவின் பாரபட்சமான குணம் குறித்தும் கமல் குறிப்பிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து நாமினேஷனில் இருந்த கேப்ரில்லா, சோம், ஷிவானி மற்றும் ரம்யா காப்பாற்றப்பட்டு ஆஜீத் வெளியானார். இப்படி ஒரு நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான நாமினேஷன் துவங்கி இருக்கிறது.

இது ஒருபுறம் கடந்த வாரம் முழுதும் நடைபெற்ற டாஸ்க்கின் அடிப்படையில் ஆஜீத், ரியோ, சோம் ஆகிய மூன்று பேர் சிறந்த போட்டியாளராக தேர்ந்தெடுக்கபபட்டனர். இவர்கள் மூவருக்கும் நடைபெற்ற கேப்டன் பதவிக்கான டாஸ்க்கில் ரியோ வெற்றி பெற்று இந்த வார தலைவராக தேர்வு செய்யப்பட்டார். எனவே, இந்த வார நாமினேஷனில் இருந்து தப்பித்து இருப்பதால் ரியோ நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் என்று கூறப்பட்டது. ஆனால், இறுதி வாரம் என்பதால் அவரும் நாமினேஷன் லிஸ்டில் இருக்கிறார்.

-விளம்பரம்-

Advertisement