என்றென்றும் மக்கள் மத்தியில் உலக நாயகனாக கலக்கிக் கொண்டிருப்பவர் கமலஹாசன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரும் ஆவார். அதோடு இவர் விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் தொகுப்பாளரும் ஆவார். சமீபத்தில் கமலஹாசன் அவர்கள் அமெரிக்க பயணம் முடிந்து திரும்பிய போது இவருக்கு சளி, இருமல் இருந்ததால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கோவிட் டெஸ்ட் எடுத்திருக்கிறார். அப்போது கமலுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
இதனால் கமலுக்கு தனியார் மருத்துவமனை ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், கமலுக்கு கீழ் மூச்சு குழாயில் தொற்று இருப்பதால் சிகிச்சை அவசியம் என்றும் லேசான காய்ச்சல் இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறியிருந்தார்கள். அதுமட்டும் இல்லாமல் கமலஹாசன் கோவிஷீல்டு தடுப்பூசி இரண்டு டோஸ்களும் போட்டுக் கொண்டதால் பெரிய அளவில் அவருக்கு பாதிப்பு நேரவில்லை என்றும் விரைவில் குணமடைந்து விடுவார் என்றும் மருத்துவர் தரப்பில் இருந்து தகவல் வெளியாகி இருந்தது.
இதையும் பாருங்க : தன்னுடைய உடல் எடை குறித்து தொடர்ந்து எழும் கேள்விகள் – கடுப்பான பாக்கியலட்சுமி நேஹா.
கமலுக்கு பதிலாக கடந்த வாரம் ரம்யா கிருஷ்ணன் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். ஆனால், கமல் அளவிற்கு ரம்யா கிருஷ்ணன் நிகழ்ச்சியை சுவாரசியமாக தொகுத்து வழங்க வில்லை என்று பலரும் புலம்பிக் கொண்டு இருக்கிறார்கள். இதனால் மீண்டும் எப்போது வருவார் என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மருத்துவமனை சார்பாக வெளியிட்ட அறிக்கையில் 4ஆம் தேதியில் இருந்து நடிகர் தன் வேலைகளில் ஈடுபடலாம் என்று அறிவித்து இருக்கிறார்கள். இந்த வாரமும் ரம்யா கிருஷ்ணன் தான் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் நடிகர் கமல் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மீண்டும் வந்து இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது அதனால் நாளை பிக்பாஸ் மேடையில் கமலை பார்க்கலாம்.