கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. நேற்றுடன் 103 நாட்களை வெற்றிகரமாக கடந்துள்ள இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் தர்ஷன் வெளியேற்றப்பட்டதால் இந்த சீசனில் லாஸ்லியா, சாண்டி,முகென் ,ஷெரின் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இன்னும் 7 நாட்களில் இந்த சீசனின் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிய வந்துவிடும். இந்த சீசனில் தான் இறுதிப்போட்டிக்கு இரண்டு ஆண்களும் இரண்டு பெண்களும் தகுதியாகி உள்ளார்கள்.
இந்த சீசனில் மலேசியாவை சேர்ந்த ஒருவர் இலங்கையை சேர்ந்த ஒருவர் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் கர்நாடகத்தை சேர்ந்த ஒருவர் என்று அணைத்து மக்களின் கவனத்தை ஈர்த்து விட்டார் பிக் பாஸ் . பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைய இருப்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பல்வேறு போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று வந்த வண்ணம் இருந்தனர்.
அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மீரா மிதுன், ரேஷ்மா, மோகன் வைத்யா, பாத்திமா பாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தனர். அதே போல நேற்றய நிகழ்ச்சியில் சேரன் மற்றும் வனிதா பிக் பாஸ் வீட்டிற்கு செல்வதாக ஏற்கனவே ஒரு தகவல் வெளியாகியிருந்தது. ஆனால், எதிர்பாராத விதமாக சாக்க்ஷி மற்றும் கஸ்தூரி கூட பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். தற்போது கவின் மற்றும் தர்ஷன் வீட்டிற்குள் சென்றுள்ளனர்.
இன்றைய முதல் ப்ரோமோ:
கவின் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றுள்ள நிலையில் லாஸ் லியாவின் தந்தை லாஸ்லியாவை வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அதில் ஒழுங்காக விளையாடு, இப்போது இருப்பது போலவே இரு என்று கூறியுள்ளார். அதற்கு லாஸ்லியா, என்னை மன்னித்து விடுங்கள் நான் எல்லாவற்றையும் வெளியில் வந்த பிறகு பேசுகிறேன் என்று கூறியுள்ளார். எனவே , இன்று கவின் குறித்து லாஸ்லியாவின் தந்தை எதாவது பேசியுள்ளாரா என்பதை பொறுத்திருந்து பாப்போம்.
இன்னும் 3 நாட்களில் இந்த சீசன் வெற்றியாளர் யார் என்பது தெரிந்து விடும். இந்த சீசனில் பட்டத்தை வெல்லப்போவது யார் என்பதற்கான வாக்குப்பதிவு இந்தவாரம் படு மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி முகெனுக்கு தான் அதிகப்படியான வாக்குகள் விழுந்து வருகிறது. முகெனுக்கு அதிக வாக்குகள் விழுவதற்கு தர்ஷனும் ஒரு காரணம் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் தர்ஷன் பிக் பாஸ் வீட்டில் இருந்தவரை முகெனுக்கு தனது ஆதரவை தெரிவித்து வந்தார். அதேபோல பிக் பாஸ் வீட்டில் இருந்து தர்ஷன் வெளியேறிய போது நான் ஜெயிக்கவில்லை என்றாலும் நீ ஜெயிக்க வேண்டும். அப்படி செய்தால் அது நான் ஜெயித்ததற்கு சமம் என்று கூறிவிட்டு சென்றார் இதனால் தர்ஷனின் ஆதரவாளர்கள் தற்போது தங்களது ஆதரவைத் முகெனுக்கு தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர் என்று கூறப்படுகிறது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.