பிகிலில் ராயப்பன், மைக்கேல் தெரியும்.. அப்போ இந்த C என்பது யாருடைய பெயர் தெரியுமா ?

0
15483
Bigil

தென்னிந்திய திரைப்பட உலகையே கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகர் ‘இளைய தளபதி விஜய்’. மேலும், இயக்குனர் அட்லி அவர்கள் நடிகர் விஜய்யின் தீவிர ரசிகர் ஆவார். இதனை தொடர்ந்து நம்ம தளபதி விஜய் அவர்களுடன் மூன்றாவது முறையாக இணைந்து பணியாற்றுகிறார். அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 63 வது படமான “பிகில்” படம் இன்னும் சில நாட்களில் அதாவது தீபாவளி அன்று திரையரங்குக்கு வெளிவர உள்ளது என்ற தகவல்கள் சமூக வலைத் தளங்களில் ஜெட் வேகத்தில் பரவி வருகின்றது.பிகில் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து உள்ளார். இவர்களோடு விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், யோகிபாபு ஆகிய பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின் நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளது.மேலும், இந்தப் படத்துக்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் இசையமைத்துள்ளார். விஜய்யின் ‘பிகில்’ படம் ரசிகர்களிடையே அதிக ஆர்ப்பாட்டத்தையும், ஆவலையும் தூண்டியுள்ளது.

Bigil

தளபதி ரசிகர்கள் மற்றும் மக்கள் அனைவரும் பிகில் படத்திற்காக ஆவலுடன் எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறார்கள். பிகில் படத்தின் டிரைலர் இணையங்களில் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். மேலும், பிகில் படத்தின் டிரைலர் சமூக வலைத்தளங்களில் வந்தவுடன் ரசிகர்கள் திருவிழா போன்று கொண்டாடி வருகின்றனர். இது இதுவரை யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு ட்ரைலர் வந்த சில மணி நேரங்களிலேயே பல மில்லியன் பார்வையாளர்களை தாண்டியது. மேலும், பிகில் படத்தின் ட்ரெய்லர் வந்ததை தொடர்ந்து தியேட்டர்களில் எந்த அளவிற்கு கூட்டம் அலைமோத போகிறதோ? என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த பிகில் ட்ரைலரை ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் பல பிரபலமான நட்சத்திரங்களும் பார்த்து கொண்டாடி வருகின்றனர். விஜய் அவர்களின் பிகில் படத்தின் ட்ரைலரை பார்த்துவிட்டு பல பிரபலங்கள் பாராட்டியும், வாழ்த்துகளை தெரிவித்தும் வருகிறார்கள்.

- Advertisement -


இதையும் பாருங்க : முகென் காதலிப்பதாக சொல்லும் நதியா வேறு ஒருவரை காதலிக்கிறாரா.. வைரலாகும் புகைப்படம்..

இந்த ‘பிகில்’ படம் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். இந்த படத்தில் விஜய் அவர்கள் அப்பா மற்றும் மகன் என்று இரு வேடங்களில் நடித்துள்ளார்.இதில் மகனுக்கு “மைக்கேல்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பாவின் பெயர் “ராயப்பன்” என மிரட்டலான, அதிரடி பெயரை வைத்து உள்ளார்கள்.மேலும், பிகில் படத்தில் பெண்கள் கால்பந்து விளையாட்டின் கேப்டனாக மைக்கல் விஜய் இருக்கிறார். இந்நிலையில் பிகில் படத்தின் டிரைலர் வருவதற்கு முன்னரே விஜய்யின் கால்பந்து விளையாட்டின் அடையாள அட்டை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார்கள். இந்தக் கார்டில் ‘சீனியர் வுமென்ஸ்(women’s ) நேஷனல் ஃபுட்பால் சாம்பியன்ஷிப்’ என்று எழுதப்பட்டிருந்தது. மேலும், இந்த ஐடி கார்டில் மைக்கேல்.C என்ற பெயரில் உள்ளது. அது மட்டும் இல்லைங்க பிகில் படம் ட்ரைலரில் கூட நம்ம தளபதி விஜய் போட்டு இருந்த டீசர்ட்டில் கூட C என்று போடப்பட்டு இருந்தது. இந்நிலையில் C -ன்னா கேப்டன் தான் என்று நம்ம எல்லாரும் நினைத்து இருந்தோம்.

-விளம்பரம்-
Bigil

ஆனா, ஐடி கார்டில் மைக்கேல்.C என்று இருப்பது அனைவருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. நம்ம தளபதி விஜய் மைக்கேலின் அப்பா பெயர் ராயப்பன், அப்ப மைக்கேல்.R என்று தானே இருக்கனும் என பல கேள்விகள் எழுப்பி வருகின்றனர் நெட்டிசன்கள். இதைத் தொடர்ந்து மைக்கல் விஜய்யின் அப்பா பெயர் கிறிஸ்டியானோ ராயப்பன் ஆக இருக்குமோ என்ற வதந்திகளும் வருகின்றன. ஏனென்றால், இந்த படத்தில் மைக்கேல் விஜய்யின் அப்பா ராயப்பன் அவர்கள் கால்பந்து விளையாட்டை குறித்து அதிகம் பேசியிருப்பார். மேலும், அவர் கால்பந்து விளையாட்டு வீரராக இருப்பாரோ? என்றும் அவருக்கு கால்பந்து விளையாட்டு வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது அதிக ஆர்வம் இருந்திருக்குமோ? இல்ல பிரபலமான கால்பந்து விளையாட்டு வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பெயரை தன் பெயருக்கு முன்னால் வைத்திருக்கலாமா? என்று பல வதந்திகள் இணையங்களில் வந்து கொண்டிருக்கின்றன. இது மட்டும் இல்லாமல் பிகில் படத்தில் மூன்று விஜய் உள்ளார்கள் என்றும்,அது மைக்கேல்,ராயப்பன்,பிகில் என்றும் மற்றொரு பக்கம் கூறி வருகிறார்கள் ரசிகர்கள். அப்ப விஜய்யின் டீசர்ட்டில் குறிக்கப்பட்டிருக்கும் C – க்கு அர்த்தம் என்னவாக? இருக்கும், 3 விஜய்யா? என்பது படத்தைப் பார்த்தால் தான் தெரியும்.ஏன்னா , அந்த அளவிற்கு நிறைய சுவாரசியமான விஷயங்கள்பிகில் படத்தில் காத்துக் கொண்டிருக்கின்றன என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Advertisement