கடந்த சில நாட்களாகவே பிக்பாஸ் நிகழ்ச்சி ஒரு சுவாரஸ்யம் இல்லாமலே போய் கொண்டு இருந்தது. பின்னர் கஸ்தூரி பிக்பாஸ் வீட்டில் ஒய்ல்டு கார்டு போட்டியாளராக சென்ற போது வனிதாவை மிஞ்சும் அளவிற்கு கஸ்தூரி நல்ல கண்டன்ட்களை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரும் கிணற்றில் போட்ட கல்லாக ஒன்றும் செய்யாமல் தான் இருந்து வந்தார்.
இதனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுவாரஸ்யத்தை கூட்ட முடிவு செய்த பிக்பாஸ் வனிதாவை டாஸ்க் என்ற பெயரில் சிறப்பு போட்டியாளராக வீட்டிற்குள் அனுப்பி வைத்து. வனிதா சென்ற முதல் நாளே மற்ற போட்டியாளர்கள் மத்தியில் சண்டையை கிளப்பிவிட, நேற்றைய நிகழ்ச்சியில் அபி மற்றும் முகென் இருவரும் அடித்து கொள்ளாத குறையாக சண்டை போட்டுக் கொண்டனர்.
இதையும் பாருங்க : குழந்தையுடன் சென்று கலைமாமணி விருதை பெற்றுக்கொண்ட சரவணன்.! வைரலாகும் புகைப்படம்.!
நேற்று நடந்த சண்டையை வைத்து பார்க்கும்போது விஜய் டிவியே வனிதாவிடம் போட்டியாளர்கள் மத்தியில் சண்டையை கிளப்பும் விதமாக பேச வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து அனுப்பியது போலத்தான் தெரிந்தது. எது எப்படியோ வனிதா வந்தபிறகு நிகழ்ச்சியை ஒரு சூடு பிடித்துள்ளது என்று ரசிகர்கள் கருதி வருகின்றனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.