லாஸ்லியாவை காதலிக்கும் உடன் நடித்த நடிகர் – சர்ச்சையை ஏற்படுத்திய லாஸ்லியா பட நடிகர்.

0
5963
losliya
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சி எத்தனையோ புது முகங்களுக்கு தமிழ் சினிமாவில் பாதையை வகுத்துக் கொடுத்திருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் பல்வேறு பரிச்சயமில்லாத முகங்கள் கலந்து கொண்டார்கள். இதில் தர்ஷன் முகேன், லாஸ்லியா போன்ற பலரும் ரசிகர்களுக்கு புதுமுகமாக தான் இந்த நிகழ்ச்சியில் அறிமுகமானார்கள். ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் மூவருக்குமே தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட பிரபலம் கிடைத்தது.

-விளம்பரம்-

அதிலும் குறிப்பாக லாஸ்லியாவின் புகழ் கொடிகட்டி பறந்து வருகின்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூன்றாவது சீஸனில் பங்குபெற்ற முகேன் மற்றும் தரிசனை விட லாஸ்லியா தான் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். முதலில் ஆரி நடிக்கும் புதிய படத்தில் கமிட்டானார். அதன் பின்னர் ஹர்பஜன் சிங் மற்றும் அர்ஜுன் நடிக்கும் பிரண்ட்ஷிப் என்ற படத்தில் கமிட்டாகி இருந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்னர்தான் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் என்று அடுத்தடுத்து வெளியாக இருந்தது.

இதையும் பாருங்க : உங்க மேனேஜர கால் பண்ண சொல்லுங்க, என் படத்துல உங்களுக்கு வாய்ப்பு தர – வடிவேலுக்கு மீரா மிதுன் கொடுத்த ஆபர் (காலக் கொடும இதெல்லாம்)

- Advertisement -

இந்த இரண்டு படங்களும் வெளிவராத நிலையில் தற்போது லாஸ்லியா அடுத்த படத்தில் கமிட்டாகியிருக்கிறார். லாஸ்லியா கதாநாயகியாக கமிட் ஆகியுள்ள இந்த படத்தினை Axess film factory என்ற நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், இந்த படத்தில் லாஸ்லியாவிற்கு ஜோடியாக புதுமுக நடிகர் பூரானேஷ் என்பவர் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை ஜெ எம் ராஜா சரவணன் என்பவர் இயக்க இருக்கிறார். இவரும் புது முக இயக்குனர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. லாஸ்லியா சமீபத்தில் இந்த படத்தின் அறிவிப்பை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் பிரின்ட்ஷிப் படத்தில் நடித்து வரும் சதீஷ் சமீபத்தில் படக்குழுவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை போட்டு,என்றும் தொடரும் இந்த #friendship Love u ஹர்பஜன், லாஸ்லியா என்று பதிவிட்டு பிரின்ட்ஷிப் படக்குழுவினர் சிலரையும் டேக் செய்தார். சதீஷின் இந்த பதிவிற்கு தமிழில் பதில் ட்வீட் செய்துள்ள ஹர்பஜன் சிங், மச்சி என்ன இப்பிடி பச்சயா பொய் சொல்ற நீ Losliya வை தான லவ் பன்றேன்னு சொன்ன.. அன்னிக்கு இந்த விஷயம் தெரியுமா ?? நம் நட்பு என்றும் தொடரும் தோழா என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement