ஹர்பஜனா விடுங்க, லாஸ்லியா படத்தில் அடுத்து இணைந்துள்ள மாபெரும் நடிகர் யாருனு தெரியுமா ?

0
17297
losliya
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இவர் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர். லாஸ்லியா பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் தமிழ் மக்களிடையே அதிக வரவேற்பையும், ரசிகர் பட்டாளத்தையும் சேர்த்தார். மேலும், பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இந்த அளவிற்கு பட்டையைக் கிளப்பியதற்கு காரணம் என்று பார்த்தால் அது ‘கவின், லாஸ்லியா’ காதல் தான். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தாலும் இவர்களுடைய காதல் குறித்து இன்னும் சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு தான் வருகிறது. ரசிகர்கள் பலரும் இவர்கள் காதல் குறித்து ஆவலாக எதிர்நோக்கி வந்தனர் என்பது அனைவருக்கும் தெரிந்தே. ஆனால், இவர்கள் இருவரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அவரவர் வேலைகளை பார்த்து வருகின்றனர்.

-விளம்பரம்-

தற்போது லாஸ்லியா அவர்கள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்க்கு ஜோடியாக ஃப்ரெண்ஷிப் படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் அதிகார பூர்வமாக வெளியாகி உள்ளது. இந்திய கிரிக்கெட் அணியில் மிகப் பிரபலமான வீரர் ஹர்பஜன் சிங். நடிகர் சந்தானம் அவர்கள் நடிக்கும் டிக்கிலோனா படத்தில் ஹர்பஜன் சிங்க் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து இருக்கிறார். இது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயமே. மேலும், இந்த ஃப்ரெண்ஷிப் படத்தை சியண்டோவா ஸ்டுடியோ, சினிமா ஸ்டுடியோ நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறார்கள். மேலும், ஜான் பவுல் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இந்த படத்தை இயக்குகின்றனர்.

- Advertisement -

இதையும் பாருங்க : உன் **முகத்தை உலகம் பார்க்கட்டும். ஆபாச மெசேஜ் அனுப்பி நபரின் புகைப்படத்தை வெளியிட்ட ஷாலு ஷம்மு.

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் எல்லாம் பயங்கர குஷியில் உள்ளார்கள். லாஸ்லியாவுக்கு முதல் படத்திலேயே அடித்தது லக் என்று கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்த படத்தில் நடிகர் அர்ஜுன் அவர்கள் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளார்கள். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனரும் ஆவார். அர்ஜுன் அவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

இவருடைய படம் என்றாலே அதிரடி, ஆக்ஷன் ஆக தான் இருக்கும். அதனால் இந்த படமும் ஆக்ஷன் கலந்த படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை தொடர்ந்து இயக்குனர் ஆல்பர்ட் ராஜா இயக்கும் புது படத்தில் நடிகர் ஆரி நாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் சிருஷ்டி டாங்கே நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் லாஸ்லியா நடிக்கிறார். இந்த படத்தில் நடிகை அபிராமி இணைந்துள்ளார். இந்த இரு படங்களிலும் லாஸ்லியாவை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

Advertisement