உன் **முகத்தை உலகம் பார்க்கட்டும். ஆபாச மெசேஜ் அனுப்பி நபரின் புகைப்படத்தை வெளியிட்ட ஷாலு ஷம்மு.

0
54592
shalu-Shammu
- Advertisement -

கடந்த சில காலமாகவே இளசுகள் மத்தியில் சென்சேனாக இருந்து வருகிறார் நடிகை ஷாலு ஷம்மு. நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் காமெடி கலாட்டாகள் நிறைந்த வறுத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.மேலும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீவிதாவுடன்  படம் முழுவதும் தோழியாக நடித்தவர் தான் ஷாலு சம்மு.  வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு பின்னர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் படத்திலும் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

- Advertisement -

இவர் நடித்த படங்களை விட சமூக வலைதளத்தில் இவர் பதிவிட்ட வீடியோக்கள் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஷாலு ஷம்மு ஆண் நண்பர்களுடன் நடனமாடும் இரண்டு விடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. எப்படியும் பட வாய்ப்புகளுக்காக தான் அம்மணி இது போன்ற புகைப்படங்களையும் விடீயோக்களையும் பதிவிட்டு வந்தார். தற்போது அம்மணி இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் படத்தில் நடிக்க வேண்டும் என்றால் படுக்கையை பகிர வேண்டும் என்று பிரபல இயக்குனர் கூறியதாக வருத்தப்படாதா வாலிபர் சங்கம் பட நடிகை பகீர் குற்றச்சாட்டை ‘நீங்கள் மீடூவால் பாதிக்கபட்டுள்ளீர்களா என்று கேள்வி கேட்டிருந்தார்’ அதற்கு பதில் அளித்த ஷாலு ஷம்மு ‘விஜய் தேவர்கொண்டா படத்தில் நடிக்க பிரபல இயக்குனர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும், அதனை தான் வெளியில் சொல்லவில்லை ‘ என்று கூறியிருந்தார். இந்த நிலையில் மீடு புகார் தெரிவிதிர்ந்த்தால் சில பட வாய்ப்புகளை தவறவிட்டுள்ளதாக கூறி இருந்தார்

-விளம்பரம்-

ஷாலு ஷம்மு கடந்த சில காலங்களாக கவர்ச்சியான புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை ஸ்டேட்டஸ்ஸில் அவர் பதிவிட்டிருந்தார். அந்த புகைப்படத்திற்கு ஷாலு ஷம்முவிடம் மிகவும் ஆபாசமாக பேசி, ஒருவர் மெசேஜ் அனுப்பியுள்ளார். அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து ஷாலு ஷம்மு அந்த நபரின் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். மேலும், இந்த உலகம் அவனின் முகத்தை பார்க்கட்டும் என்று பதிவிட்டுள்ளார் ஷாலு ஷம்மு. அதோடு இந்த நபரை ரிப்போர்ட் செய்யுமாறு தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

Advertisement