பட வாய்ப்பு வந்ததும் பொது நிகழ்ச்சிக்கு ஸ்லீவ் லெஸ் ஜாக்கட் அணிந்து வந்த லாஸ்லியா.

0
41229
losliya
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெற்றிகரமாக நிகழ்ச்சியாக திகழ்ந்து வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிச்சயமில்லாத ஒரு சில போட்டியாளர்கள் கலந்துகொண்டார்கள். அந்த வகையில் லாஸ்லியா மிகவும் முக்கியமான நபர் ஆவார். இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா, தனது நண்பர் ஒருவர் மூலமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்தார்.

-விளம்பரம்-
Image

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் அம்மணிக்கு ஏகப்பட்ட பிரபலம் ஏற்பட துவங்கியது. சொல்லப்போனால் ஓவியா, யாஷிகாவிற்கு பின்னர் சமூக வளைதளத்தில் அதிக ரசிகர்களை கொண்டவர் என்றால் அது லாஸ்லியாவிற்கு தான் என்றும் சொல்லலாம். தற்போது லாஸ்லியா தமிழ் சினிமாவிலும் அறிமுகமாக இருக்கிறார். ஆம், கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்க் அவர்கள் தமிழ் படத்தில் ஹீரோவாக களம் இறங்கி இருக்கிறார். இந்த படத்தை சியண்டோவா ஸ்டுடியோ, சினிமா ஸ்டுடியோ நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறார்கள்.

இதையும் பாருங்க : அஜித்தை போல ஷூட்டிங் ஸ்பாட்டில் சமைத்த சூரி. வைரலாகும் வீடியோ.

-விளம்பரம்-

மேலும், ஹர்பஜன் சிங்க் நடிக்கும் இந்த படத்திற்கு ஃப்ரெண்ஷிப் என்று பெயர் சூட்டி உள்ளார்கள். ஜான் பவுல் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இந்த படத்தை இயக்குகின்றனர். நேற்று தான் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தில் ஹர்பஜன் சிங்குக்கு ஜோடியாக பிக் பாஸ் புகழ் லாஸ்லியா நடிக்கிறார் என்ற தகவல் அதிகார பூர்வமாக வெளியாகி உள்ளது. மேலும், ஆரியுடனும் ஒரு படத்தில் கமிட் ஆகி இருக்கிறார் லாஸ்லியா.

View this post on Instagram

BiggBoss #Losliya Latest Clicks

A post shared by Behind Talkies (@behindtalkies) on

இதனால் லாஸ்லியாவின் ரசிகர்கள் மிகுந்த குஷியில் இருக்கிறார்கள். தற்போது இரண்டு படங்களில் கமிட்டாகி இருந்தாலும் லாஸ்லியா அடிக்கடி கடை திறப்பு விழா, விருது நிகழ்ச்சிகள் என்று தவறாமல் சென்று கொண்டுவந்திருக்கிறார். அந்த வகையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருந்த லாஸ்லியா ஸ்லீவ்லேஸ் ஜாக்கெட்டை அணிந்து கொஞ்சம் கிளாமராக சென்றிருக்கிறார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் சினிமாவில் இன்னும் நடிக்கவே ஆரம்பிக்கவில்லை அதற்குள் இப்படியாக என்று வாயை பிளந்துள்ளார்கள்.

Advertisement