நண்பர்களுடன் நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட லாஸ்லியா. விடியோவை கண்டு புலம்பும் ரசிகர்கள்.

0
15969
Losliya
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி சமீபத்தில் தான் திருவிழா போன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு முடிவடைந்தது. மேலும், மூன்று வருடங்களாக இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து தான் வழங்கி உள்ளார். அது மட்டுமில்லாமல் மற்ற ரெண்டு சீசன்களை விட இந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மக்களிடையே அதிக வரவேற்பையும் நல்ல விமர்சனங்களையும் பெற்று வந்தது. மேலும், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் காதல், சண்டை, கலவரங்கள் என அனைத்துக்கும் பஞ்சமே இல்லாமல் இருந்தது. லாஸ்லியா அவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர். இவர் இலங்கையை சேர்ந்தவர். மேலும், இலங்கையில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கினார். நடிப்பின் மீது அதிக ஆர்வம் உடையவர்.

-விளம்பரம்-
#losliya

#losliya

Biggboss Reshma Army ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಬುಧವಾರ, ಡಿಸೆಂಬರ್ 4, 2019

இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு கலந்து கொண்டார். கவின்– லாஸ்லியா காதல் பிக்பாஸ் வீட்டில் அழகாகவும், காதல் காவியமாக இருந்தது. அதோடு லாஸ்லியா பிக் பாஸ் வீட்டில் கவிஞனை காதலித்த விஷயம் அவர்கள் வீட்டில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதனால் லாஸ்லியாவின் அப்பா பயங்கர கடுப்பாகி லாஸ்லியாவை திட்டி விட்டு, காதல் எல்லாம் இப்போதைக்குத் தேவையில்லை. நீ எதற்காக வந்தாயோ அந்த வேலையை மட்டும் பாரு, என்று கண்டிப்புடன் சொன்னார். அதிலும் இந்த பிக் பாஸ் சீசன் 3 இல் கவின், லாஸ்லியா காதல் பிக் பாஸ் முடிந்தும் தற்போது வரை கூட ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இதையும் பாருங்க : எதையும் சந்தோசமாக பதிவிட முடியல. வீடியோ பகிர்ந்து மனம் வருந்திய அமிரிதா.

- Advertisement -

ஆகவே இதனால் தான் கவினும், லாஸ்லியாவும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பேசாமலும் எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருக்கிறார்களோ?? என்று நெட்டிசன்கள் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும், இப்படி கூறியும் இவர்கள் இருவரும் அமைதியாகவே இருக்கின்றன. மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் இவர்களுடைய காதல் பிரேக் அப் ஆகி விட்டது என்றும் சமூக வலைத்தளங்களில் பல தகவல்கள் வருகிறது. ஆனால், அதெல்லாம் வதந்தி, கூடிய விரைவில் கவின்– லாஸ்லியா திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்றும் தெரியவந்து உள்ளது. இந்நிலையில் தற்போது லாஸ்லியா அவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக அலங்கரிக்கப்பட்ட இடத்தில் தன்னுடைய நண்பர்களுடன் நின்று போட்டோ எடுத்துள்ளார்.

அதோடு தன் நண்பர்களுடன் நீச்சல் குளத்தில் குதூகலமாக கொண்டாடிய வீடியோ ஒன்றையும் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இதை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதோடு லாஸ்லியா தன் ஆண் நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பார்த்த கவின் ஆர்மிகள் சமூக வலைத்தளங்களில் பயங்கர சர்ச்சைகளை எழுப்பி வருகிறார்கள். மேலும், லாஸ்லியா அவர்கள் கொஞ்சம் கூட கவினை பற்றி நினைக்காமல் இந்த காரியத்தை செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்தால் கவின் மனது எவ்வளவு காயப்படும் என பல கமெண்டுகளை கூறி வருகின்றனர் நெட்டிசன்கள்.

-விளம்பரம்-
Advertisement