மிகப்பெரிய இயக்குனரின் படத்தில் கமிட் ஆகப்போகும் லாஸ்லியா.! ஹீரோ தெரியுமா.!

0
21126
Losliya
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் பங்குபெறும் போட்டியாளர்களுக்கு கண்டிப்பாக சினிமா வாய்ப்பு கிடைத்து விடும். அந்த வகையில் பல்வேறு பிரபலங்கள் தற்போது சினிமாவிலும் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் தற்போது ஒளிபரப்பாகி வரும் மூன்றாவது சீஸனில் பங்கு பெற்றுள்ள லாஸ்லியாவிற்கும் விரைவில் சினிமா வாய்ப்பு கிடைக்க இருக்கிறது.

-விளம்பரம்-
Image result for cheran losliya

செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா தற்போது பிக்பாஸ் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார் ஆரம்பத்தில் இவருக்கு ரசிகர்களின் பல்வேறு ஆதரவுகள் இருந்து வந்தன. ஆனால், சமீப காலமாக இவர் செய்து வரும் செயல்களால் கொஞ்சம் ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்து வருகிறார் .இந்த நிலையில் சேரன், விஜய் சேதுபதியை வைத்து எடுக்கப்போகும் படத்தில் லாஸ்லியா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதையும் பாருங்க : ஸ்ரீதேவி சிலையை செய்ய சொன்னா பிக் பாஸ் நடிகையை செஞ்சி வச்சிருக்காங்க.! கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்.!

- Advertisement -

சேரன், விஜய் சேதுபதியை வைத்து எடுக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும் என்றும், இப்படத்தின் மூலம் தனது கம்பேக் ரொம்பவே ஸ்ட்ராங்காக இருக்கும், என்றும் சேரன் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். மேலும், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் பிரபல இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் லாஸ்லியாவிற்கு சினிமாவில் வாய்ப்பு என்று கூறி மிகப்பெரிய சர்ப்ரைஸ் ஒன்றை கொடுத்தார் என்பதும் குறிப்பிடதக்கது.

Image result for cheran losliya

மேலும், கடந்த சில நாட்களாக சேரன் மற்றும் லாஸ்லியா அப்பா மகள் உறவில் ஒரு விரிசலும் ஏற்பட்டு வருகிறது. இதனை இருவரும் சரி செய்ய முயற்சி செய்து வருகின்றனர். எனவே, லாஸ்லியாவை தனது படத்தில் நடிக்க வைக்கப் போவதையும் இதே பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாகவே  கூட அறிவித்தாலும் ஆச்சர்யபடுவதற்கு இல்லை.

-விளம்பரம்-
Advertisement