விஜய் மற்றும் அஜித் குறித்து ஒரே வார்த்தையில் பதில் அளித்த ஷாருக்கான்.!

0
4636
Sharuk-Khan

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்தியில் ஒரு சில நடிகர் நடிகைகளை நன்கு தெரிந்திருக்கும். அந்த வகையில் ஷாருக்கானும் பிற மொழி சினிமா ரசிகர்களால் அறியப்பட்டுள்ள ஒரு மாபெரும் நடிகர். இந்தியில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் ஷாருகான் உலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிகர் ஷாருக்கான் இந்தியில் பல்வேறு ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அதே போல இவரது படங்கள் தமிழிலும் டப் செய்து வெளியாகியிருக்கிறது அந்த வகையில் இவர் நடித்த பல்வேறு படங்கள் தமிழிலும் சூப்பர் ஹிட் அடைந்துள்ளது.

இத்தனை ஆண்டுகள் ஆனாலும், இந்தி சினிமாவில் இன்னமும் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் ஷாரூக்கான். மேலும் அவருக்கும் தமிழ் சினிமாவிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு நடிகர்கள் ஷாருக்கான் நெருங்கிய நண்பர்கள் அவர்கள். அந்த வகையில் நடிகர் விஜய் மற்றும் ரஜினிகாந்த் ஷாருக்கானுக்கு மிகவும் நெருக்கம் தான். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான விஜய், அஜித், தனுஷ் குறித்து நடிகர் ஷாருகான் ஒரே வார்த்தையில் தனது டுவிட்டர் பக்கத்தில் பதில் அளித்துள்ளார் அந்த செய்தி தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக பரவிவருகிறது.

- Advertisement -

இதையும் பாருங்க : தமிழ் ரசிகர்கள் இப்படி எல்லாம் கூட படம் பார்ப்பார்களா.! காயத்ரீயின் டீவீட்டால் கடுப்பான ரசிகர்கள்.!

எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷாருக்கானை கோடிக்கணக்கான ரசிகர்கள் இவரை சமூக வலைதளத்தில் பின்தொடர்ந்து வருகின்றனர் மேலும் ஷாருக்கானும் அடிக்கடி சமூகவலைதளத்தில் தனது ரசிகர்களுடன் உரையாடுவது வழக்கம். அதே போல ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு மிகவும் ஒளிவு மறைவு இல்லாமல் பதில் கூறும் நபர் தான் ஷாருக்கான். அந்த வகையில் சமீபத்தில் நடிகர் ஷாருகான் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடி அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார் அப்போது தமிழ் ரசிகர்கள் சிலர் தென்னிந்திய நடிகர்களை பற்றி கேள்விகளை கேட்டு வந்தனர் சில ரசிகர்கள் விஜய் அஜித் தனுஷ் பற்றி உங்களது கருத்து என்ன என்று ஷாருக்கானிடம் கேட்டனர்.

-விளம்பரம்-

அப்போது விஜய் குறித்து கூறிய ஷாருக்கான், அவர் அற்புதம் என்று கூறியுள்ளார். மேலும், அஜித் என்னுடைய நண்பர் என்றும் தனுஷை தனுக்கு மிகவும் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார். ஷாருக்கான் விஜய் அஜித் தனுஷ் பற்றி சொன்னதை பிரபல பாடல் ஆசிரியரான விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் மேலும் ஒரு மாபெரும் நடிகர் தமிழ் நடிகர்களை பற்றி இப்படி கூறியுள்ளது மிகவும் பெருமையாக இருக்கிறது என்றும் பாடலாசிரியர் விவேக் குறிப்பிட்டுள்ளார்.

இதுமட்டுமல்லாது ரசிகர் ஒருவர் ஷாருக்கானுடன் நேரடி தமிழ் படத்தில் நடிக்க எண்ணம் இருக்கிறதா என்று கேட்டிருந்தார் அதற்கு பதிலளித்த ஷாருக்கான் கண்டிப்பாக தமிழ் படத்தில் நடிக்க தனக்கு ஆர்வம் இருப்பதாகவும் கூறியுள்ளார் எனவே ஷாருக்கானை விரைவில் நேரடி தமிழ்ப்படத்தில் பார்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஏற்கனவே ஷாருக்கான் விஜய்யின் பிகில் படத்தில் நடிப்பதாக இருக்கிறது என்ற செய்தி சமூக வலைதளத்தில் வைரலாக பேசப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அது வெறும் வதந்தி தான் என்று பின்னர் தெரியவந்தது. தற்போது அவருக்கு பதிலாக ஜாக்கி ஷாராப் தான் பிகில் படத்தில் நடித்துள்ளார்.

Advertisement