சேரனுக்கு பின் மதுமிதா வீட்டிற்கு சென்ற முதல் பெண் போட்டியாளர். யார் தெரியுமா ?

0
9953
Madhumitha
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் சர்ச்சைக்கு எப்போதும் பஞ்சமே இருந்தது இல்லை. அந்த வகையில் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கடந்த சிலமாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. இந்த சீசனில் பல சர்ச்சையான விஷயங்கள் நடந்தேறியது. அதில் மிகவும் சர்ச்சையான விஷயமாக பார்க்கப்பட்டது மதுமிதாவின் திடீர் வெளியேற்றம் தான். மேலும்ம் ஒரு எபிசோடில் மதுமிதா காவேரி குறித்து பேசியதால் அவரை ஷெரின் வார்த்தைகளால் புண்படுத்தி அவரை தற்கொலைக்கு தூண்டியதாக சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது.

-விளம்பரம்-

அதேபோல பிக் பாஸ் வீட்டில் இருந்து மதுமிதா வெளியேறிய போது சேரன் மற்றும் கஸ்தூரியை தவிர வேறு யாரிடமும் பேச நான் விரும்பவில்லை என்றும் கூறியிருந்தார். மேலும் சேரன் மற்றும் கஸ்தூரியை தவிர அப்போது வீட்டில் இருந்த 8 பேர் மீதும் மதுமிதா வழக்கு தொடர்பாகவும் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. மேலும், இறுதிப் போட்டிக்கு மதுமிதாவின் குடும்பத்தினர் யாரும் வரவில்லை இருப்பினும் மதுமிதா கணவர் பிக்பாஸில் இறுதிப்போட்டிக்கு வந்தது போல விஜய் தொலைகாட்சி போலியான ஒரு வீடியோவை இணைத்து ஒளிபரப்பியது. இதனால் விஜய் டிவியை கேள்வி கேட்டு மதுமிதாவின் கணவர் வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் பாருங்க : ஆபாச படமா ? அப்போது மட்டும் பார்ப்பேன். அதுல்யா அளித்த ஷாக்கிங் பதில்.

- Advertisement -

இத்தனை விஷயங்கள் நடந்தும் மதுமிதா குறித்து யாருமே இன்னமும் வாய் திறக்காதது ரசிகர்களுக்கு பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. சேரன், வணக்கம், நான் மதுமிதாவிடம் பேசி கொண்டு தான் இருக்கிறேன். விரைவில் அவரை சந்திப்பேன் என்று பதில் அளித்திருந்தார். அதனை உறுதி செய்யும் விதமாக மதுமிதாவின் கணவர் மோசஸ், நலம் விசாரித்தமைக்கு மிக்க நன்றி என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் விரைவில் மதுமிதாவை, சேரன் சந்திப்பார் என்று ரசிகர்கள் எதிர் பார்த்து வந்தனர்.

This image has an empty alt attribute; its file name is 1-5.jpg

-விளம்பரம்-

சொன்னதை போலவே சேரன் மதுமிதாவை சந்தித்துள்ளார். சமீபத்தில் மதுமிதாவை சந்திக்க அவரது வீட்டிற்கே சென்றுள்ளார் சேரன். மேலும், சேரனுக்கு, மதுமிதா விருந்தும் வைத்து அசத்தியுள்ளார். இந்த நிலையில் சேரனை தொடர்ந்து மதுமிதாவை சந்திக்க நேரில் சென்றுள்ளார் ரேஷ்மா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மற்ற பெண் போட்டியாளர்கள் யாரும் செல்லாத நிலையில் ரேஷ்மா முதல் பெண் போட்டியாளராக மதுமிதாவை சந்தித்துள்ளார். மேலும், சேரனை கவனித்தது போலவே ரேஷ்மாவிற்கும் விருந்து வைத்து அசித்துள்ளார் மதுமிதா.

Advertisement