‘நார்மல் டெலிவரி ஆகறவங்க தான் இப்படி இருக்க முடியும்’ – மதுமிதா பேச்சால் திட்டி தீர்க்கும் C – Section டெலிவரி தாய்மார்கள்.

0
545
madhumitha
- Advertisement -

சுகப்பிரசவத்தினால் தான் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும் என்று மதுமிதா அளித்திருந்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. தமிழ் சினிமாவை பொறுத்த வரை பெண் காமெடியன்கள் மிகவும் குறைவு. அப்படியே பெண் காமடியன்கள் இருந்தாலும் அவர்கள் ஆண் காமடியனுடன் இணைந்து நடித்தே பிரபலமாகி இருக்கின்றனர். அந்த வகையில் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் சந்தானத்துடன் இணைந்து நடித்து ஜாங்கிரி என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரமபலமானவர் ஜாங்கிரி மதுமிதா.

-விளம்பரம்-

இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா எனும் நகைச்சுவை தொடரில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். அதன் பின் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்தார். இதனை தொடர்ந்து இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து இவர் பல்வேறு படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் மதுமிதா.

- Advertisement -

பிக் பாஸில் மதுமிதா :

பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து பிரச்சனைகள் போய்க் கொண்டிருக்கும் போது திடீரென்று நடிகை மதுமிதா தற்கொலை முயற்சியில் தன்னுடைய கையை கத்தியால் அறுத்துக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனால் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார். பின் இது குறித்து அவரிடம் கேட்டபோது, என்னை வீட்டிலுள்ள எட்டு பேரும் குரூப் ராகிங் செய்து கொடுமைப் படுத்தினார்கள் என்றும், மன உளைச்சலுக்கு ஆளாகி அதனால் நான் கையை அறுத்துக் கொண்டேன் என்றும் கூறி இருந்தார்.

பிக் பாஸ் பின் மதுமிதா :

பின் இறுதி போட்டியில் கூட மதுமிதா கலந்துகொள்ளவில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மதுமிதா ஒரு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருந்தார். அதே போல ஒரு சில படங்களிலும் நடித்து இருந்தார். ஆனால், சமீப காலமாக இவரை எதிலும் காண முடிவதில்லை. இதனிடையே நடிகை மதுமிதா கடந்த 2019 ஆம் ஆண்டு மோசஸ் ஜோயல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் தான் நடிகை மதுமிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

மதுமிதா அளித்த பேட்டி:

மதுமிதா இறுதியாக விஜய் சேதுபதி- டாப்ஸி நடித்த ‘அனபெல் சேதுபதி’ படத்தில் நடித்து இருந்தார். இதன் பின்னர் வேறு எந்த படத்திலும் காண முடியவில்லை. இப்படி ஒரு நிலையில் மதுமிதா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருந்தார். இவருக்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது. இந்நிலையில் குழந்தை பிறந்தது குறித்து மதுமிதா அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்தது, நார்மல் டெலிவரி மூலம் மட்டும் தான் குழந்தை மிக ஆக்டிவாக இருக்கும். ஆப்ரேஷன் செய்யும் போது நன்றாக இருக்கும். ஆனால், வாழ்நாள் முழுவதும் அந்த வலியை அனுபவிக்க வேண்டும்.

மதுமிதாவை விமர்சித்த நெட்டிசன்கள்:

அழுது பெற்றால் தானே அவள் அம்மாவாகிறாள் என்று ஆபரேஷன் மூலம் குழந்தை பெறுபவர்களை விமர்சித்து மதுமிதா கூறி இருந்தார். இப்படி இவர் பேசி இருந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது தொடர்ந்து பலரும் திட்டி கொண்டு வருகின்றனர். அதிலும் சிலர், உனக்கு என்ன தெரியும் சி -செக்சன் பத்தி. எல்லாம் தெரிந்த மாதிரி பேசாதே. ஆபரேஷன் செய்தவர்களும் ஆரோக்கியமாக நன்றாகத் தான் இருக்கிறார்கள். அந்த குழந்தைகளும் நன்றாக தான் இருக்கிறது என்று பலரும் மதுமிதாவை திட்டி கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement