மதுமிதாவிற்கு ஒரு நாள் சம்பளம் மட்டும் இவ்வளவா.! இன்னும் இவ்வளவு பாக்கி இருக்காம்.!

0
2830
madhumitha
- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் மதுமிதா தற்கொலைக்கு முயன்றதாக அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அதிகாரபூர்வமாக வெளியேற்றப்பட்டிருந்தார். இந்த நிலையில் மதுமிதா மீது விஜய் தொலைக்காட்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக நேற்று தகவல்கள் வெளியாகிது.

-விளம்பரம்-
Madhu

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் சம்பளம் பேசப்பட்டு தான் பங்கேற்றுள்ளனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், சம்பள பணத்தை தரவில்லை என்றால் மதுமிதா தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டுவதாக விஜய் தொலைக்காட்சியின் சட்டப்பிரிவு மேலாளர் பிரசாத், கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக செய்திகள் பரவி வருகிறது.

இதையும் பாருங்க : நீ கெட்டவன் கிடையாது நல்லவன்.! கடைசில இவர் கிட்டயே கவின் பேரெடுத்துட்டாரே.

- Advertisement -

இதுகுறித்து அவர் தரப்பில் கூறியுள்ளதாவது, மதுமிதா சம்பளமாக  11 லட்சத்து 50 ஆயிரம் பெற்றுள்ளதாகவும் அவரது ஒரு நாள் சம்பளம் 80000 என்ற கணக்கில் 42 நாட்களுக்கான பாக்கி பணத்தை திருப்பி தருவதாக கூறியிருந்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். 

அதனை ஒப்புக்கொண்ட மதுமிதா, கடந்த 19ம் தேதி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டீனா என்பவரின் தொலைபேசி வாட்ஸ் அப் எண்ணிற்கு வாய்ஸ் மெசேஜ் மூலமாக பணத்தை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் தற்கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு குறித்து காவல் துறையினர் விசாரணையையும் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement