மதுமிதா அதிரடி பேட்டி.! விஜய் டிவி பதில் அளிக்க வேண்டும்.! கமல் தலையிட வேண்டும்.!

0
7757
madhumitha

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் மதுமிதா தற்கொலைக்கு முயன்றதாக அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து அதிகாரபூர்வமாக வெளியேற்றப்பட்டிருந்தார். இந்த நிலையில் மதுமிதா மீது விஜய் தொலைக்காட்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக தகவல்கள் வெளியானது.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் சம்பளம் பேசப்பட்டு தான் பங்கேற்றுள்ளனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், சம்பள பணத்தை தரவில்லை என்றால் மதுமிதா தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டுவதாக விஜய் தொலைக்காட்சியின் சட்டப்பிரிவு மேலாளர் பிரசாத், கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாக செய்திகள் பரவி வந்தன.

இதையும் பாருங்க : சரவணனுக்கு பின்னர் சாண்டி குடும்பத்தை நேரில் சந்தித்த போட்டியாளர்.! வைரலாகும் புகைப்படம்.! 

- Advertisement -

மேலும், கடந்த 19ம் தேதி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் டீனா என்பவரின் தொலைபேசி வாட்ஸ் அப் எண்ணிற்கு வாய்ஸ் மெசேஜ் மூலமாக பணத்தை இரண்டு நாட்களில் தரவில்லை என்றால் தற்கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார் என்றும் அவர் அளித்த தெரிவிக்கபட்டிருந்தது.

madhumitha

இந்த நிலையில் மதுமிதா முதன் முறையாக பிரஸ் மீட் வைத்து இந்த பிரச்சனை குறித்து விளக்கமளித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், “நான் அமைதியாக இருந்தால் என் பெயர் கெட்டுவிடும் என்பதால் தான் தெளிவுபடுத்துகிறேன். என் மீது பொய் புகார் அளித்துள்ளது விஜய் டிவி. எதற்காக என்மீது புகார் அளித்தார்கள் என்றே தெரியவில்லை. எனக்கு வழங்க வேண்டிய தொகை குறித்து கடிதம் அனுப்பினேன். விஜய் டிவியை நான் எப்போதும் மிரட்டவில்லை. என் மீது புகார் கொடுத்ததற்கு பின் விஜய் டிவியை என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

-விளம்பரம்-

இன்றுவரை விஜய் டிவி வகுத்த வழிமுறைப்படியே நடக்கிறேன். திரைத்துறையில் இருக்கும் என்மீது இதுவரை எந்த புகாரும் வந்ததில்லை. விஜய் டிவியும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் நடிகர் கமல்ஹாசனும் தலையிட்டு இந்த விவகாரத்தை சுமூகமாக முடித்து வைக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம்இதுவரை நான் வெளியில் சென்று மருத்துவம் பார்க்கவில்லை. நிகழ்ச்சிக் குழு அனுமதித்த மருத்துவர்தான் எனக்கு மருத்துவம் பார்த்து வருகிறார் என்று கூறியுள்ளார்.

Advertisement