‘ரேஸ் கிங் அஜித்’ என்று அஜித் காலண்டரை ரிலீஸ் செய்த பிக் பாஸ் பிரபலம்.

0
4003
ajith
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் தல அஜித். கடந்த ஆண்டு அஜித் அவர்களின் நடிப்பில் வெளி வந்த ‘விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை’ ஆகிய இரண்டு படங்களும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், நேர்கொண்ட பார்வை படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வினோத்தும், தயாரிப்பாளர் போனிகபூர் இருவரும் இணைந்து மீண்டும் தல அஜித்தை வைத்து வலிமை படத்தை உருவாக்கி வருகிறார்கள். இந்த படத்திற்கு ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா மற்றும் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா. வலிமை படம் குறித்த தகவல்களை மிக ரகசியமாக வைத்து வருகிறார்கள் படக்குழுவினர். அதோடு இந்த படம் இயக்குனர் வினோத்தின் சொந்த கதையை மையமாகக் கொண்டது என்றும் கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Image result for ajith calendar

- Advertisement -

நேர்கொண்ட பார்வை படத்தில் பணியாற்றிய அதே குழுவினரே அஜித்தின் வலிமைப் படுத்திலும் பணியாற்றுகிறார்கள் என்று அதிகாரப் பூர்வமாக அறிவித்து உள்ளார்கள். சமீப காலமாகவே தல அஜித் அவர்கள் படங்களில் பெப்பர் சால்ட் லுக்கில் இருந்த நிலையில் இந்த வலிமை படத்தில் பிளாக் ஹேர் ஸ்டைலில் அதுவும் இளமை தோற்றத்தில் காட்சி அளிப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்திற்காக தல அஜித் அவர்கள் கடும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டு உள்ளார். இந்த படத்தில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளும், பைக் ரேஸ் காட்சிகளும் கண்டிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இதையும் பாருங்க : பிரண்ட்ஸ் படத்தில் விஜய் மற்றும் சூர்யாவிற்கு ஜோடியாக முதலில் நடிக்க இருந்தது இவர்கள் தான். வெளியான போட்டோ ஷூட்.

இந்த படத்தில் தல அஜித் அவர்கள் போலீசாக நடிக்கிறார். அதோடு ஹீரோயினியும் போலீஸ் கேரக்டர் தான் என்றும் தல இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்றும் பேசப்படுகிறது. வலிமை படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தான் தொடங்கப்பட்டது. தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த படம் 2020 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்கில் வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர். தற்போது இந்த படத்தின் சண்டைக்காட்சி தொடங்கி உள்ளது. இந்நிலையில் தல அஜித்துக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். அதனால் இவரது வலிமை படம் குறித்த தகவல்கள் வெளியானவுடன் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் போட்டு பகிர்ந்து வருகிறார்கள்.

-விளம்பரம்-

இதனால் படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு குறைந்து விடும் என்ற காரணத்தினால் தான் வெளியிடாமல் ரகசியமாக பாதுகாத்து வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் கூட அஜித்தின் மகள் அனோஸ்கா பிறந்தநாள் அன்று அஜித் ரசிகர்கள் ஸ்பெஷலாக போஸ்டர்கள் அடித்து கொண்டாடினார்கள். இந்நிலையில் அஜித் ரசிகர்கள் அஜித்தின் மாஸ் ஆன புகைப்படத்தை காலண்டரில் அடித்து உள்ளார்கள். தற்போது அந்த கேலண்டரை பிக் பாஸ் பிரபலம் மதுமிதாவும், அவரின் கணவரின் கையால் ரிலீஸ் செய்து உள்ளனர். அதில் ‘ரேஸ் கிங் அஜித்’ என்ற ஹேஷ் டேகை குறிப்பிட்டு அந்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு உள்ளார்கள். தற்போது இந்தப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றனர். தல ரசிகர்கள் அனைவரும் இதை அதிகமாக ஷேர் செய்தும் வருகிறார்கள்.

Advertisement