நடிகையும் பிக் பாஸ் போட்டியாளருமான மதுமிதா தன் மகனின் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். தமிழ் சினிமாவை பொறுத்த வரை பெண் காமெடியன்கள் மிகவும் குறைவு. அப்படியே பெண் காமடியன்கள் இருந்தாலும் அவர்கள் ஆண் காமடியனுடன் இணைந்து நடித்தே பிரபலமாகி இருக்கின்றனர். அந்த வகையில் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் சந்தானத்துடன் இணைந்து நடித்து ஜாங்கிரி என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரமபலமானவர் ஜாங்கிரி மதுமிதா. இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான லொள்ளு சபா எனும் நகைச்சுவை தொடரில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்.
அதன் பின் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற தொடரில் நடித்தார். இதனை தொடர்ந்து இவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். பின்னர் கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த பிக் பாஸ் சீன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.
இதையும் பாருங்க : அவர் என்னை வேண்டாம் என சொல்லிவிட்டார் – மஞ்சிமா மோகன் பதிவிட்ட பதிவு.
ராகிங்கால் தற்கொலை முயற்சி :
பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து பிரச்சனைகள் போய்க் கொண்டிருக்கும் போது திடீரென்று நடிகை மதுமிதா தற்கொலை முயற்சியில் தன்னுடைய கையை கத்தியால் அறுத்துக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.அவரிடம் கேட்டபோது என்னை வீட்டிலுள்ள எட்டு பேரும் குரூப் ராகிங் செய்து என்னை கொடுமைப் படுத்தினார்கள் என்றும், மன உளைச்சலுக்கு ஆளாகி அதனால் நான் கையை அறுத்துக் கொண்டேன் என்று கூறினார்.
மன உளைச்சலுக்கு ஆளான மதுமிதா :
மேலும், இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்ட மதுமிதா அன்றைக்கு நான் செய்தியாளர்களிடம் சந்திப்பில் பேசிய அனைத்து விஷயங்களும் உண்மைதான். ஆனால் என்ன பிக்பாஸ் வீட்டிற்கு சென்றால் மன உளைச்சல் தான், ஆனால் எனக்கு வழக்கமாக ஏற்படும் மன உளைச்சலுடன் அதிகமாக ஏற்பட்டது. மேலும், வெளியே வந்து 20 நாட்கள் அந்த மன உளைச்சல் அதிகம் இருந்தது. அதனால்தான் மக்களிடம் பேசப்போகிறேன் என்று சொன்னவுடன் அதிகமாக உணர்ச்சி வசப்பட்டு விட்டுப் பேசினேன் என்றும் கூறி இருந்தார்.
மதுமிதா – மோசஸ் :
இறுதி போட்டியில் கூட மதுமிதா கலந்துகொள்ளவில்லைபிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மதுமிதா ஒரு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருந்தார். அதே போல ஒரு சில படங்களிலும் நடித்து வந்தார்.ஆனால், சமீப காலமாக இவரை எதிலும் காண முடிவதில்லை.நடிகை மதுமிதா கடந்த 2019 ஆம் ஆண்டு மோசஸ் ஜோயல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்னர் தான் நடிகை மதுமிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட கலந்து கொண்டார்.
ஆண் குழந்தைக்கு அம்மாவான மதுமிதா :
மதுமிதா பிக் பாஸ் வீட்டில் இருந்த போதே மதுமிதாவின் கணவர் ட்விட்டரில் போட்டியாளர்களை பற்றி விமர்சித்து தொடர்ந்து ட்வீட் செய்து இருந்தார். மதுமிதா இறுதியாக விஜய் சேதுபதி, டாப்ஸி நடித்த ‘அனபெல் சேதுபதி’ படத்தில் நடித்து இருந்தார். இதன் பின்னர் வேறு எந்த படத்திலும் காண முடியவில்லை. இப்படி ஒரு நிலையில் கடந்த மே மாதம் இவருக்கு ஆண் குழந்தை பிறந்து இருந்தது. இப்படி ஒரு நிலையில் முதன் முறையாக தன் மகனின் புகைப்படத்தை மதுமிதா வெளியிட்டு இருக்கிறார். அதுவும் இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி வர்ணத்தில் தனது குழந்தைக்கு ஆடை அணிவித்து அருமையான புகைப்படங்களை வெளியிட்டு இருக்கின்றனர்.