இதனால் தான் அப்படி செய்தேன்.! முதன் முறையாக காரணத்தை கூறிய மதுமிதா.!

0
10079
Madhu

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த சனிக்கிழமை மதுமிதா வெளியேற்றப்பட்டது பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. கடந்த சில தினங்களாக மதுமிதா மற்றும் ஆண்கள் அணிக்கும் பிரச்சனை ஓடியது. இந்த நிலையில் மதுமிதா தற்கொலைக்கு முயன்றதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

madhumitha

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மதுமிதா தன்னை காயப்படுத்தியதற்கு முக்கிய காரணமே இரண்டு நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற ஹெலோ டாஸ்கின் போது ஏற்பட்ட பிரச்சனை தான் என்பது தற்போது தெரியவந்துள்ளது. மேலும், மதுமிதாவின் இந்த தற்கொலை முயற்சிக்கு காரணம் ஆண்கள் தான் என்று பலரும் கூறி வருகின்றனர்.

இதையும் பாருங்க : காலில் செம சில்லறை வாங்கியுள்ள யாஷிகா ஆனந்த்.! கலாய்த்தெடுக்கும் ரசிகர்கள்.! 

- Advertisement -

இந்த நிலையில் எதற்காக தற்கொலைக்கு முன்யன்றேன் என்று மதுமிதா முதன் முறையாக வாய் திறந்துள்ளார். இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய மதுமிதா, “நான் தைரியமான பெண் என்று எல்லாருக்கும் தெரியும். என் தைரியம் எந்த அளவுக்கு சோதிக்கப்பட்டிருந்தால் இந்தவொரு முடிவுக்கு வந்திருப்பேன். இதுகுறித்த காட்சிகளில் ஒளிப்பரப்பலாமா அல்லது வேண்டாமா என்பதை அவர்கள் முடிவு செய்யட்டும்.

Madhu

நான் என் கருத்தை நான் அங்கு வெளிப்படுத்தினேன். என்னை எவ்வளவு இழிவாக, கீழ்தரமாக பேச முடியுமோ அவ்வளவு பேசி என்னை முட்டாள், கேப்டன்சிக்கு தகுதி இல்லாதவள், நான் இருந்தால் நாங்கள் இருக்கமாட்டோம் என பேசிய போது, யார் முட்டாள் என தெரியப்படுத்த வேண்டும் என்று தோன்றியது. அதற்காக இப்படி செய்தேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement