இதை தான் மதுமிதா தினமும் கும்பிடறாரா.! என்னானு பாத ஷாக் ஆகிடுவீங்க.! மீண்டும் பிரச்சனையில் சிக்காமல் இருந்தால் சரி.!

0
61533
Madhumitha
- Advertisement -

தமிழில் ஓகே ஓகே படத்தில் ஜாங்கிரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிங்கர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை மதுமிதா. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்குபெற்று வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு டாஸ்கின் போது சாண்டியை வாய்க்கு வந்தபடி திட்டி, இந்த வீட்டில் நானும் இருகிறேன் என்பதை உறுதி செய்தார் மதுமிதா.

-விளம்பரம்-

அதே போல இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடிக்கடி தன்னந்தனியாக பேசுவதும் படுக்கை அறையில் சாமி படங்களை வைத்து வழிபடுவதையும் நாம் பல முறை கண்டுள்ளோம். ஆனால், இதுநாள் வரை அவர் சாமி படத்தை வைத்து வழிபடுகிறார் என்று நினைத்தால் ‘தமிழ்’ என்ற சொல் எழுதிய அட்டையை தான் வழிபட்டு வருகிறார்.

இதையும் பாருங்க : குழந்தையும் கையுமாக இருக்கும் நஸ்ரியா.! புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்.! 

- Advertisement -

இவரது இந்த தமிழ் பற்று பாராட்டக்கூடியது தான் என்றாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் தமிழ் என்ற அடையாளத்தை வைத்து மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்க்க இப்படி செய்கிறாரா என்ற எண்ணமும் தோன்றுகிறது. அதற்கு காரணம், கடந்த சீசனில் வெற்றி பெற்ற ரித்விகா மீதும் இதே குற்றச்சாட்டு தான் எழுந்தது.

அதே போல வனிதா இருந்த போது தமிழ் பெண்கள் பெண் பற்றியும் கலாச்சாரத்தை பற்றியும் பேசியதால் இவருக்கும் மற்ற ஹவுஸ்மேட்ஸ்களுக்கும் பிரச்சனை வெடித்தது. தற்போது இவர் இப்படி தமிழ் என்ற உணர்வை தூண்டும் வகையில் நடந்து வருவதால் வெளி மாநில போட்டியாளர்கள் மத்தியில் இது சர்ச்சையாக பார்க்கப்படவும் வாய்ப்பு இருக்கிறது என்பது தான் உண்மை.

-விளம்பரம்-
Advertisement