சிம்பு பிறந்தநாளுக்கு ஆர்வக் கோளாராக ட்வீட் செய்து பின் டெலீட் செய்த மஹத் – வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

0
25939
simbhu mahath
- Advertisement -

சிம்புவின் பிறந்தநாளுக்கு நடிகர் மஹத் பதிவிட்ட ட்வீட் கேலிக்கு உள்ளாகி இருக்கிறது. தமிழ் சினிமாவில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிம்பு. கடந்த சில காலமாக சினிமாவில் பெரும் சறுக்களை கண்டுள்ளார். சமீப காலமாக சிம்பு நடிப்பில் வெளியான எந்த படங்களும் ஓடவில்லை. மேலும், இவர் கமிட் ஆகி இருந்த மாநாடு படமும் இவரது ஒத்துழைப்பு இல்லாததால் கைவிடபட்டது. ஆனால், சிம்பு மீண்டும் இந்த படத்தில் நடித்து வருகிறார். நடிகர் சிம்பு படபிடிப்பிற்கு ஒழுங்காக வர வேண்டும் என்று தற்போது சபரி மலைக்கு மாலைபோட்டு இருந்தார்.

-விளம்பரம்-

நடிகர் சிம்பு மாலை போட்டுள்ளதால் அவரது நண்பரும் நடிகருமான மஹத்தும் மாலை போட்டு இருந்தார். நடிகர் மஹத் சிம்புவின் நெருங்கிய நண்பர் என்பது பலருக்கும் தெரியும். சிம்பு நடித்த பல்வேறு படங்களில் மஹத்தும் நடித்துள்ளார். இதனால் சிம்பு என்ன செய்தாலும் அவருக்கு ஆதரவாக இருந்து வருகிறார் நடிகர் மஹத். சிம்பு எங்கே சென்றாலும் அவருக்கும் ஒரு பாடி கார்ட் போல செயல்படுவார் மஹத்.

இதையும் பாருங்க : ஒரே ஒரு இந்தி படம், ஹாலிவுட் ரேஞ்சுக்கு கிளாமரில் கலக்கும் சிமிட்டல் நடிகை.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் நடிகர் மஹத், சிம்புவின் பிறந்தநாளுக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். அதில், 22 ஆண்டுகள் உன்னை தெரியும். உன்னை பற்றிய புதிய விஷயங்களை இப்போதும் கண்டு பிடித்துகொண்டே இருக்கிறேன். உன்னுடைய நண்பர் என்பதை நான் வாழ்த்தாக நினைக்கிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள், லவ் யூ சிலம்பரசன் என்று பதிவிட்டதோடு சிலம்பரசனின் ட்விட்டர் கணக்கை டேக் செய்து இருந்தார். ஆனால், மஹத்தின் இந்த பதிவிற்கு கீழ் பலரும் கேலியாக கமன்ட் செய்து வருகின்றனர்.

அதற்கு முக்கிய காரணமே மஹத் பதிவிட்டுள்ள இதே பதிவு சிம்புவின் ட்விட்டர் கணக்கிலும் பதிவிட பட்டு இருக்கிறது. அந்த பதிவு நீக்கப்பட்டு இருந்தாலும். அதன் ஸ்க்ரீன் ஷாட்டை ரசிகர்கள் பலரும் கமன்ட் செய்து வருகின்றனர். இதனால் மஹத்தே சிம்புவின் ட்விட்டர் கணக்கை பயன்படுத்தி இப்படி தன்னை பற்றி பதிவை போட்டாரா, இல்லை சிம்புவின் ட்விட்டர் கணக்கை மஹத் தான் பராமரித்து வருகிறாரா என்று கேள்விகளை எழுப்பி வருகின்றனர் ரசிகர்கள்.

-விளம்பரம்-
Advertisement