மாயாவோ ஆயாவோ, கமல் தன் கூட நடிச்சாலே – கமல்,மாயா உறவு குறித்து தயாரிப்பாளர் ராஜன்.

0
189
- Advertisement -

தமிழில் பிக் பாஸ் 7 நிகழ்ச்சி சமீபத்தில் தான் கோலாகலமாக முடிவடைந்து இருக்கிறது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணி மா சீசனில் ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள். இதுவரை இதில் பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், அன்னயா, ரவீனா, விசித்திரா, பூர்ணிமா ரவி என்று பலர் கலந்துகொண்டனர்.

-விளம்பரம்-

இறுதி போட்டியில் மாயா, மணி, அர்ச்சனா ஆகிய மூவர் டாப் 3யில் இடம்பிடித்தனர். . இந்த சீசன் தொடங்கிய நாளில் இருந்து முடியும் வரை அனல் பறக்க பரப்பாக சென்றது. இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்த அர்ச்சனா தான் டைட்டில் பட்டத்தை வென்று இருக்கிறார். இவரை அடுத்து இரண்டாம் இடத்தை மணி, மூன்றாம் இடத்தை மாயா, நான்காம் இடத்தை தினேஷ், ஐந்தாம் இடத்தை விஷ்ணு பிடித்து இருக்கிறார்கள். டைட்டில் வென்ற அர்ச்சனாவுக்கு 50 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.

- Advertisement -

இந்த சீசனில் அதிகம் பேசப்பட்ட ஒரு சர்ச்சைக்குரிய போட்டியாளராக இருந்தது மாயா மற்றும் பூர்ணிமா தான். ஆனாலும், இவர் இறுதி போட்டி வரை வந்தும் 2ஆம் இடம் பிடிக்கவில்லை என்பதே பலரின் மகிழ்ச்சியாக இருந்தது. அதிலும் எந்த red cardஐ கொடுத்து மாயா பிரதீப்பை அனுப்பினரோ அதே red card கட்டத்திற்குள் மாயா நின்று மாயா வெளியேற்றப்பட்டார் என்றெல்லாம் கூறி வந்தனர்.

இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி இருந்த விக்ரம், சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த லியோ படத்தில் சில காட்சியில் நடித்திருந்தார். இந்த சீசனில் அதிகம் வெறுக்கப்பட்ட ஒரு போட்டியாளர்கள் என்றால் அதில் டாப் மூன்று இடத்தில் மாயாவிற்கு தான் முதலிடம். இவர் பல முறை நாமினினேட் ஆன போது இவர் நிட்சயம் வெளியேறிவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

-விளம்பரம்-

ஆனால், ஒவ்வொரு வாரமும் இவர் தப்பித்துக்கொண்டே வந்து தற்போது இறுதி கட்டம் வரை வந்துவிட்டார். மாயா இப்படி இறுதி வரை வர காரணம் கமல் தான் என்று சமூக வலைதளத்தில் அடிக்கடி கமல் கேலிக்கு உள்ளானார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற தயாரிப்பாளர் ராஜன், மாயா மற்றும் கமல் குறித்து பேசி இருக்கிறார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவரிடம் கமல் குறித்து கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த அவர் ‘ படத்தில் காதலியாக நடித்தாலே அவர்களுடன் கமல் ஐக்கியம் ஆகிவிடுவார். அவங்களும் அதை தப்பா நினைக்க மாட்டாங்க. பிக் பாஸில் கூட மாயாவோ,ஆயாவோ அவருடன் கமல் ஐக்கியம் ஆகி இருக்காமல். அது இப்போ வெளியில் கிசுகிசு ஆகிவிட்டது என்று கூறியுள்ளார். ஏற்கனவே புகழ் மற்றும் குர்ஷி நிகழ்ச்சி ஒன்றில் கமல் – மாயாவை இணைத்து கேலி செய்து பேசியது பெரும் சர்ச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement