பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வனிதா வெளியேறியபின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கொஞ்சம் கண்டன்ட் கொடுத்தது மீரா மட்டும் தான். ஆரம்பித்த சில நாட்களிலேயே மற்ற போட்டியாளர்களின் வெறுப்பை சம்பாதித்தார் மீரா. இருப்பினும் அப்போது மீராவிற்கு கொஞ்சம் மக்கள் ஆதரவு இருந்தது.
ஆனால், நாட்கள் செல்ல செல்ல அம்மணி தன் தலையிலேயே மண்ணை வாரி போட துவங்கிவிட்டார். அதிலும் சேரன் மீது உள்ள காழ்ப்புணர்ச்சி காரணமாக இவர் ஆடிய நாடகம் தான் இவருக்கு வினையாக அமைந்தது. நிகழ்ச்சி ஆரம்பத்தில் மீராவிற்கு சேரன் தான் ஆதரவாக பேசி வந்தார்.
இதையும் பாருங்க : கவின் மற்றும் சாக்க்ஷிக்கு நல்லா நாரதர் வேல பாக்குறாங்க லாஸ்லியா.! ட்வீட் செய்த சிம்பு நண்பர்.!
ஆனால், ஒரு கட்டத்தில் இருவரும் முட்டிக்கொண்டு விட்டது. அதிலும் குறும்படம் போட்டுக்காண்பித்தும் தனது தவறை மீரா உணராமல் கடவுளுக்கு தெரியும் என்று ரஜினி வசனத்தை எல்லாம் பேசினார். இந்த நிலையில் பிரபல இந்து நாளிதழுக்கு மீரா பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
இந்த பேட்டியின் போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் யார் வெள்ளவே கூடாது என்று நினைக்கிறீர்கள் என்று மீராவிடம் கேட்கப்பட்டதற்கு, கண்டிப்பாக சாக்க்ஷி அபிராமி ஷெரின் தான். இவர்கள் அனைவருமே மோசமானவர்கள் ஒவ்வொரு வாரமும் இவர்களால் நான் பல பிரச்சினைகளை சந்தித்தேன். ஆனால் அதையெல்லாம் தாண்டி வந்துள்ளேன்.
ஒரு பெண் ஆண் குறித்து ஏதாவது சொன்னால் பெண்கள் தான் அதற்கு ஆதரவாக நிற்க வேண்டும் ஆனால் சேரன் விஷயத்தில் அவர்கள் சேரனுக்கு தான் ஆதரவாக இருந்தார்கள் அவர்கள் ஒரு பெண்ணாக என்னுடைய கண்ணோட்டத்திலிருந்து அந்த பிரச்சினையை பார்க்கவில்லை. உண்மையில் சொல்லப்போனால் இவர்களை விட ஆண்கள் தான் என்னை அதிகம் புரிந்து கொண்டு எனக்கு ஆதரவாக இருந்து வந்தனர்என்று கூறியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.