பிக் பாஸிடம் இருந்து எனக்கு கோடி வேண்டும். சர்ச்சையை கிளப்பிய போட்டியாளர்.

0
72001
kamal
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் இந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் நடைபெற்றது. அதற்கு முக்கிய காரணமே இந்த சீசனில் பங்குபெற்ற சில போட்டியாளர்கள் தான். அதிலும் குறிப்பாக மீரா மிதுன் வனிதா போன்றவர்கள் இந்த சீசனை சர்ச்சை குறையாமல் கொண்டுசென்றனர் . இதில் மீரா குறித்து நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை. மாடல் அழகியான மீராமிதுன் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற மிஸ் சவுத் இந்தியா அழகிப் பட்டத்தை வென்றவர். ஆனால், அந்த பட்டத்தை வைத்து இவர் மோசடியில் ஈடுபட்டதாக இவரிடமிருந்து அந்த அழகி பட்டம் பறிக்கப்பட்டது.

-விளம்பரம்-
meera

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே நடிகை மீரா மிதுன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். அதிலும் குறிப்பாக ஜோ மைக்கேல் என்பவர் மீராமிதுன் குறித்து பல்வேறு சரியான விஷயங்களை கூறி வந்தார். இதனால் சமூக வலைத்தளத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட மீராமிதுன் பிக்பாஸில் வாய்ப்பை பெற்றார். பிக்பாஸில் கலந்து கொண்ட பின்னரும் மீராமிதுன் சர்ச்சை ஓயவில்லை. பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது சேரன் மீது அவர் வைத்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதேபோல பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மீராமிதுன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் விஜய் டிவி தனக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை தரவில்லை என்றும் சம்பள பாக்கி கேட்டு விஜய் டிவியை தொடர்பு கொண்டால் சரியான பதில் கிடைக்கவில்லை என்றும் கூறியிருந்தார்.

இதையும் பாருங்க : சினிமாவில் மட்டும் தான் வில்லன். ஆனால், நிஜத்தில் ஹீரோ. இவர் செய்து வருவதை பாருங்க.

- Advertisement -

தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வரும் மீராமிதுன் தற்போது மும்பையில் செட்டிலாகிவிட்டார் அங்கே ஒரு சில படங்களில் நடித்து வருவதாகவும் மீராமிதுன் கூறி வருகிறார். இந்த நிலையில் மீராமிதுன் ஊடகங்களை அழைத்து பிரஸ்மீட் ஒன்றை வைத்திருந்தார். அதில் பேசிய மீரா மிதுன், எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருகிறது எனவும், எனக்கு பலரும் போன் செய்து என் முகத்தில் ஆசிட் வீசி விடுவேன் என்றும் மிரட்டுகிறார்கள். இதனால் நான் மும்பைக்கு சென்று விட்டேன், அங்கு நான் பாதுகாப்பாக உணர்கிறேன். எனக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை பிக்பாஸ் குழு இன்னும் தரவில்லை. இதற்காக நான் விஜய் தொலைக்காட்சியை தொடர்பு கொண்டாலும் அதற்கு அவர்கள் சரியான பதில் அளிக்க மறுக்கிறார்கள். இந்த பேட்டிக்கு பின்னரும் என்னுடைய பிரச்சனை தீரவில்லை என்றால் நான் உயர் அதிகாரிகளிடம் புகார் அழித்துவிடுவேன். அது பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தடை செய்யும் அளவிற்கு போய்விடும் .எனக்கு தர வேண்டிய சம்பள பாக்கியை தரவில்லை என்றால் நான் விஜய் டிவி மீதும் பிக்பாஸ் நடத்தும் ஏண்டிமால் நிறுவனத்தின் மீதும் வழக்கு தொடர்ந்து ஒரு கோடி ரூபாயை கேட்பேன். ஆகையால் நான் அவ்வாறு செய்து கொள்கிறேன், எனக்கு ஒரு கோடி ரூபாயை கொடுத்து விடுங்கள் என்று கூறியுள்ளார் மீர மிதுன்.

Meera-Mithun

ஏற்கனவே மதுமிதா விஷயத்தில் இதே போன்று தான் பிரச்சனை ஏற்பட்டு இருந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் மதுமிதா தற்கொலைக்கு முயன்றதாக அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மதுமிதா ஒரு சில நாட்கள் எந்த ஒரு பேட்டியையும் கொடுக்கவில்லை. ஆனால், பிக்பாஸ் குழு பேசியது போல தனக்கு சம்பளத் தொகையை வழங்கவில்லை என்பதால் பிரஸ்மீட் வைத்து மதுமிதா பேட்டியளித்திருந்தார். மேலும், அந்த பேட்டியில் தனக்கு தர வேண்டிய சம்பள பாக்கி என்னும் தரப்படவில்லை என்றும், இதனால் நான் விஜய் டிவி நிர்வாகத்துடன் பேசியபோது அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை என்றும் கூறியிருந்தார். ஆனால், இதை அடுத்து ஒரு சில நாட்கள் கழித்து மதுமிதா அவருக்கு சம்பளமாக வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இப்படி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற போட்டியாளர்கள் தொடர்ந்து பிக்பாஸ் குழுவை குற்றம்சாட்டி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement