தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் மீரா மிதுனை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சோஷியல் மீடியாவின் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் நடிகை மீரா மிதுன். இவர் நடிகை மட்டும் இல்லாமல் மாடலும் ஆவார். மாடல் அழகியான இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது பிக் பாஸ் நிகழ்ச்சி தான். அந்த நிகழ்ச்சியிலேயே சர்ச்சை போட்டியாளராக திகழ்ந்து இருந்தவர் மீரா மிதுன். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் தொடர்ந்து சர்ச்சையான விஷயங்களை செய்து வந்தார். அதுமட்டும் இல்லாமல் மீராமிதுன் அவர்கள் பட்டியல் இனத்தவர் குறித்து அவதூறாக பேசி இருந்தார்.
இதனால் மீரா மிதுன் மீது பல்வேறு அமைப்புகள் காவல் துறையில் புகார் அளித்தனர். இதனடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் மீரா மிதுனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். மேலும், இந்த வழக்கில் ஜாமீன் கோரி மீரா மிதுன் மனுத்தாக்கல் செய்திருந்தார். சமீபத்தில் தான் மீரா மிதுன் சிறையிலிருந்து வெளிவந்து இருந்தார். சிறையிலிருந்து வெளி வந்தவுடன் மீராமிதுன் நிறைய பேட்டி கொடுத்து இருந்தார். அதில் அவர், நான் செய்த பாவங்களுக்கான தண்டனையை அனுபவித்து விட்டேன். கடவுளுக்கும், எல்லோருக்கும் நன்றி.
ஜாமீனில் வெளியில் வந்த மீரா மிதுன் :
இனிமேலாவது நான் நல்ல பெயர் எடுக்கணும். அதற்கான முயற்சிகளை நான் செய்து கொண்டிருக்கிறேன் என்றெல்லாம் பேசி இருந்தார். பின் இவர் சிறைக்கு செல்வதற்கு முன் பேயை காணோம் படத்தில் நடித்து இருந்தார். சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. இருந்தாலும் இவர் குறித்து ஏதாவது ஒரு சர்ச்சை சோசியல் மீடியாவில் எழுந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் மீரா மிதுனை உடனடியாக கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு இட்டு உள்ளது. ஏன்னா, தற்போது நடிகை மீரா மிதுன் பேயை காணம் என்ற படத்தில் நடித்துள்ளார்.
முதல்வரை விமர்சித்த மீரா மிதுன்:
இந்த படத்தின் பெயரில் உருவாக்கப்பட்ட வாட்ஸ்அப் குழுவில், தயாரிப்பாளர் சுருளிவேல், இயக்குனர் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறித்து மீரா மிதுன் ஆபாச வார்த்தைகளால் திட்டி மார்ச் 16 ஆம் தேதி ஆடியோ வெளிவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தயாரிப்பாளர் சுருளிவேல் சென்னை மாநகர காவல் துறையில் மீரா மீது புகார் அளித்திருக்கிறார். பின் இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி மீண்டும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துஇருக்கிறார் மீரா. அதோடு ஆடியோ விட்டதாக கூறப்படும் நாளில் நான் துக்க நிகழ்வில் கலந்து கொண்டு இருந்ததாகவும், தன் மீது பொய்யாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டு தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருக்கிறார்.
காவல்துறை சார்பில் கூறியது:
மேலும், இந்த வழக்கு சில தினங்களுக்கு முன் நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் கூறியிருப்பது, இதேபோல் ஒவ்வொருவர் மீதும் அவதூறு பரப்புவதும், உண்மைக்கு புறம்பான கருத்துக்களையும் பதிவிடுவதும் தான் மீரா மிதுன் வாடிக்கையாக வைத்து இருக்கிறார். தற்போது முதல்வர் குறித்து அவதூறாக பேசி இருக்கிறார். எனவே கைது செய்ய வேண்டிய அவசியம் இருப்பதால் முன் ஜாமீன் வழங்கக்கூடாது என்று வாதிடப்பட்டது. பிறகு நீதிபதி, இதுபோன்று எப்போது எதற்காக பேசினார்? எதற்காகவது கைது செய்யப்பட்டாரா? என்றும் காவல்துறையிடம் கேள்வி எழுப்பி இருந்தார்.
நீதிமன்றம் உத்தரவு:
உடனே காவல்துறை தரப்பு வழக்கறிஞர், பட்டியலின மற்றும் பழங்குடி இனத்தவரை சேர்ந்தவர்களின் முன்னேற்றத்தை விமர்சித்து பேசிய புகாரில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டிருந்தார் மீரா. தற்போது அவர் ஜாமீனில் வெளிவந்த நிலையில் இவர் முதல்வரை விமர்சித்து கருத்து பதிவிட்டு இருக்கிறார். இப்படி காவல்துறை விளக்கத்தை ஏற்ற நீதிபதி மீரா, முன் ஜாமீன் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அதோடு அவரை கைது செய்து விசாரிக்கவும், அவரது பதிவுகளை நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.