உண்மையை சொன்னால் இப்படி கேவலமா நடந்துபீங்களா- மீண்டும் விஜயபாஸ்கரை சீண்டும் மீரா.

0
4354
meeravijayabasar
- Advertisement -

மீரா மிதுன் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை, இதுவரை தமிழில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி வரலாற்றிலேயே அதிகம் சர்ச்சையை ஏற்படுத்திய ஒரே பெருமை இவருக்கு தான் சேரும். விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பல்வேறு சர்ச்சையான விஷயங்கள் நடந்தேறியது. அதிலும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஒயில்டு கார்ட் போட்டியாளராக கலந்து கொண்ட மீரா மிதுன் சர்ச்சையின் மொத்த உருவமாக இருந்து வந்தார். சொல்லப்போனால் இந்த சீசனில் வனிதாவிற்கு பின்னர் ரசிகர்களால் அதிகம் வெறுக்கப்ட்ட வனிதாவிற்கு பின்னர் மிகவும் வெறுக்கப்பட்டது மீரா மிதுன் தான்.

-விளம்பரம்-

அந்த அளவிற்கு அம்மணி ரசிகர்களின் ஒட்டு மொத்த வெறுப்பை சம்பாதித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பாகவே இவர் மாடல் என்ற பெயரில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.மேலும், பிக் பாஸ் வரலாற்றிலேயே அதிகம் வெறுக்கப்பட்டு வந்த நபராக இருந்தார் மீரா, பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் இவர் சமூக வலைத்தளத்தில் கேவலமான பதிவுகளை செய்து வருகிறார். புகை பிடிப்பது, குடிப்பது அரைகுறை ஆடையில் ஆட்டம் போடுவது என்று அடிக்கடி தனது புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வரும் மீராமிதுன் அவ்வப்போது முக்கிய பிரபலங்கள் குறித்தும் பதிவிட்டு வருகிறார்.

- Advertisement -

அந்த வகையில் சமீபத்தில் இவர் முதலமைச்சர் குறித்தும் அமைச்சர் விஜய பாஸ்கர் குறித்தும் ட்வீட் செய்துள்ளது பலரின் கோபத்தை கிளறியுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் காரணத்தால் உலக நாடுகள் ஸ்தம்பித்து உள்ளது. தமிழகத்தை பொறுத்த வரை சுகாதார துறை அமைச்சரான விஜய பாஸ்கர், இந்த கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவ ஆரம்பித்த நாளில் இருந்து பம்பரமாய் சுழன்று வந்தார். தமிழ்நாட்டு மக்களின் ரசிகராக மாறினார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். மேலும், இவரை மீம் கிரியேட்டரகளும் சமூக வலைதளத்தில் புகழ்ந்து தள்ளிவருகின்றனர். மேலும்,மக்கள் மத்தியிலும் அடடா, இப்படி ஒரு அமைச்சரா என்று புகழாரம் சூட துவங்கினர்.

ஆனால், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் மீராமிதுன் விஜயபாஸ்கர் மற்றும் முதலமைச்சர் பொருத்து வீடொன்றை செய்திருந்தார் அதில் முதலமைச்சர் எடப்பாடி வீட்டிலும் விஜயபாஸ்கர் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி அங்கே கைப்பற்றப்படும் பணங்களை பறிமுதல் செய்தால் தமிழகத்தில் அனைத்து மாவட்டத்தில் உள்ள குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் வழங்கலாம் என்று மோடியிடம் தெரிவித்திருந்தார் மீரா மிதுன் இந்த பதிவு பலரையும் கடுப்பில் ஆழ்த்தியது.

-விளம்பரம்-

ஒருவேளை மற்றவர்களைப் போல இந்த பதிவை நான் போடவில்லை தன்னுடைய ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு விட்டது என்று மீராமிதுன் கூறுவார்கள் என்று எதிர்பார்த்தால் தற்போது அடுத்த சர்ச்சை வீடொன்றை செய்துள்ளார் அதில் நான் உண்மையை பேசியதற்காக விஜயபாஸ்கர் நீங்கள் கேவலமாக ஆட்களை அனுப்பி என்னை மிரட்டி நான் செய்த ட்வீட்டை நீக்க சொல்வீர்களா என்னிடம் நேரடியாக பேசுங்கள் இந்த அரசாங்கம் முற்றிலும் தவறானது. அனைவரும் உதவாக்கரை ஆக இருக்கிறார்கள். தமிழ்நாடு அதலபாதாளத்திற்கு சென்று கொண்டிருப்பதை நான் உங்களிடம் விளக்கிக் கூறுவேன் ‘மோடி’ என்று பிரதமரையும் டேக் செய்திருக்கிறார்.

Advertisement