நடிகை மீரா மிதுனை பற்றி சொல்லவே வேண்டாம். எல்லாருக்குமே தெரியும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே பார்த்திருப்பீர்கள். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தவுடன் மீரா மிதுன் பற்றி பல விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்த வண்ணம் உள்ளன. ஏன்னா, அந்த அளவிற்கு நடிகை மீரா மிதுன் சமூக வலைத்தளங்களில் பல சர்ச்சைகளை உருவாக்கியவர். அதிலும் சமீப காலமாகவே தமிழக அரசையும், தமிழக போலீசாரையும் மீரா மிதுன் கடுமையாக விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் நடிகை மீரா மிதுன் தமிழக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரியாக தான் பொறுப்பேற்றுளளதாக சமீபத்தில் பதிவு ஒன்றை செய்திருந்தார்.
இதுகுறித்து மீரா மிதுன் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கூறியது,” இனி யாரும் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது. நான் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறேன்” என்று கூறி பதிவிட்டிருந்தார். அதுமட்டுமில்லாமல் இவர் லஞ்ச ஒழிப்புத் துறையின் அலுவலகத்திலிருந்து இவருக்கு அப்பாயின்மென்ட் ஆர்டர் கிடைத்திருந்த கடிதத்தை சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டுள்ளார். அதில் இவருடைய பெயர் தமிழ்ச்செல்வி என்று இருந்தது.அவருடைய உண்மையான பெயர் தமிழ்ச்செல்வியா?? என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இந்த தகவல்கள் எல்லாம் உண்மையா? பொய்யா?என்ற குழப்பத்தில் உள்ளார்கள் ரசிகர்கள்.
இதையும் பாருங்க : சிட்டி சென்டரில் முன்னாள் காதலியை பார்த்த எஸ் கே. அவருடைய கணவரை பார்த்து நிம்மதி. விடீயோவ பாருங்க புரியும்.
இந்த நிலையில் மீரா மிதுன் எப்படி லஞ்ச ஒழிப்புத்துறை உறுப்பினர் ஆனார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அது வேறு ஒன்றும் இல்லை, anticorruptionandcrimecontrolcommittee.org என்ற இணையதளத்திற்கு சென்று யார் வேண்டுமானாலும் லஞ்ச ஒழிப்பு துறை அடையாள அட்டையை பெற்றுக்கொள்ளளாம். மேலும், மாவட்ட வாரியான அடையாள அட்டைக்கு ரூ. 10000, மாநில வாரியான அடையாள அட்டைக்கு ரூ.15000, தேசிய அளவிலான அடையாள அட்டைக்கு ரூ.20000 கட்டணமாக செலுத்தினால் நீங்களும் லஞ்ச ஒழிப்பு துறையின் ஒரு உறுப்பினர் தான்.
அதே போல மீரா மிதுன் பதிவிட்டுள்ள அந்த நியமன ஆணையில், சுய விருப்பத்தின் பேரில் நீங்கள் வேலை செய்யலாம். மேலும், இந்த வேலைக்கு உங்களுக்கு சம்பளம் எதுவும் தரப்படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல தனிப்பட்ட முடிவுகளை எடுக்க அனுமதி கிடையாது, இவை அனைத்திற்கும் மேலாக இந்த குழு நினைத்தால் எந்த ஒரு முன்னெச்சரிக்கையும் இன்றி உறுப்பினர்களை நீக்கவும் அதிகாரம் இருக்கிறது என்றெல்லாம் அந்த நியமன ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலமே நடிகை மீரா மிதுன் தனிப்பட்ட விருப்பம் தெரிவித்து காசு கொடுத்து இந்த பதிவை வாங்கியிருக்கிறார் என்பது உறுதியாகி உள்ளது. ஆனால், அதற்குள்ளாகவே மீரா மிதுன் ஏதோ கந்தசாமி படத்தில் வரும் விக்ரமை போல லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியாக மாறி விட்டது போல சீனா என்று நெட்டிசன்கள் மீரா மிதுனை வறுத்தெடுத்து வருகின்றனர்.