தமிழ் சினிமா திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் சிவகார்த்திகேயன். மேலும்,நடிகர் சிவகார்த்திகேயன் 1985 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி சிங்கணம்புரி சிவகங்கை மாவட்டத்தில் பிறந்தவர். இவர் முதன் முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தான் இருந்தவர். அதற்குப் பின்னர் தான் தமிழ் சினிமாவில் நடிகர் ஆனார். இவர் திருச்சியில் உள்ள ஜேஜே பொறியியல் கல்லூரியில் பயின்றவர். படிக்கும் போது தன்னுடைய மெமிக்கிரி திறமை மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக சேர்ந்தார். பின் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளி வந்த ‘மெரினா’ படத்தில் கதாநாயகனாக தமிழ் திரையுலக வாழ்க்கையை துவங்கினார். இவர் நடிகர் மட்டுமல்லாமல் சிங்கர், கம்மிடியன், மிமிக்கிரி,தொகுப்பாளர் என பல திறமைகளைக் கொண்டவர்.
இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அவர்கள் மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம்,மான் கராத்தே, காக்கி சட்டை, ரஜினிமுருகன், சீமராஜா, மிஸ்டர் லோக்கல் உள்ளிட்ட பல சூப்பர் டூப்பர் படங்களை கொடுத்து உள்ளார். இவர் ஆர்த்தி என்பவரை 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராதனா என்ற ஒரு மகள் உள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் தமிழ் திரைப் படங்களில் வரிசையாக பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறது அனைவருக்கும் தெரியும். மேலும்,இவர் நடிப்பை தாண்டி படங்களை தயாரித்தும் வருகிறார். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வந்த முதல் படம் ‘கனா’. இந்த படத்தை பாடகர் மட்டும் பாடல் ஆசிரியர் அருண் ராஜா காமராஜ் முதன் முதலாக இயக்கினார்.
இதையும் பாருங்க : நந்தினி சீரியல் புகழ் நித்யா ராமிற்கு இரண்டாம் திருமணம். மாப்பிள்ளை யார் தெரியுமா ?
அதுமட்டும் இல்லாமல் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மகள் ஆராதனா “வாயாடி பெத்த புள்ள” என்ற பாடலை பாடி உள்ளார். மேலும்,இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் பயங்கரமாக ஹிட்டானது. அதோடு ஆராதனா பாடிய வாயாடி பெத்த புள்ள பாடல் யூ டியூபில் 50 மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் பார்த்துள்ளார்கள். சிவகார்த்திகேயனை போல ஆராதனைக்கு ரசிகர்கள் படை உள்ளார்கள் என்று சொல்லலாம். இதனைத் தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான படம் ‘நம்ம வீட்டு பிள்ளை’. இந்த படம் திரையரங்குகளில் வெளியாகி வேற லெவல்ல பிளாக் பஸ்டர் படமாக மாறியது என்று சொல்லலாம். இந்த படம் குடும்ப கதையை குறிப்பாக அண்ணன், தங்கை பாசத்தை மையப்படுத்திய படமாக இருந்தது.
மேலும், இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அவர்கள் ‘ஹீரோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும், அந்த படத்தின் வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதாக படக்குழுவினர் கூறினார்கள். இந்நிலையில் சிவகார்த்திகேயன் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.மேலும், அந்த பேட்டியில் ஒருவர் இதுவரை நீங்கள் யாரிடமும் சொல்லாத ரகசியத்தைப் பற்றி எங்களுக்கு சொல்லுங்கள் என்று கூறியிருந்தார்.
அதற்கு சிவகார்த்திகேயன் அவர்கள் கூறியது, நான் படிக்கும் காலத்தில் ஒரு பெண்ணை ஒன் சைடாக காதலித்து வந்தேன். ஆனால், அந்த பெண் வேற ஒரு பையனை காதலித்து அவரோடு கமிட்டாகி விட்டார். அதை நான் அப்படியே விட்டு விட்டேன். பின் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருக்கும் போது அந்த பெண்ணை ஒரு முறை பார்த்துள்ளேன். ஆனால், அந்த பெண்ணுடன் அவர் காதலித்த பையன் கூட இல்லை. அவர் தனியாகத் தான் இருந்தார். அதை பார்த்தவுடன் தான் எனக்கு மனதே நிம்மதியாக இருந்தது. “அப்பாடா அவனுக்கும் கிடைக்கல” என்று சந்தோசப்பட்டேன் என கூறினார்.