சவால் விட்ட மீரா மிதுனை கதறவிட்டுள்ள போலீஸ் – கைது செய்த போது போலீசையே மிரட்டியுள்ள மீரா. வெளியான வீடியோ.

0
4224
meera
- Advertisement -

சமூக வலைதளத்தில் சவடால் விட்டுக்கொண்டு அடாவடி செய்து வந்த மீரா மிதுனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். சமூக வலைதளத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய நபராக இருந்து வந்தவர் மாடலும் நடிகையுமான மீரா மிதுன். மாடல் அழகியான இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ விஜய் தொலைக்காட்சியில் சென்ற ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தான்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் தொடர்ந்து சர்ச்சையான விஷயங்களை செய்து வந்தார். அதிலும் கடந்த சில மாதங்களுக்கு முன் கோலிவுட் மாபியா என்ற பெயரில் சூர்யா மற்றும் விஜய் குறித்து அவதூறாக பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார் மீரா. இப்படி ஒரு நிலையில் மீராமிதுன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் Sc சமூகத்தினரை தர குறைவாக பேசி இருந்தார் மீரா மிதுன்.

இதையும் பாருங்க : நானும் மனுஷன்தா, இனிமே சூப்பர் சிங்கர் பக்கமே வர மாட்டேன் – சூப்பர் சிங்கர் 8 நடுவரின் ஷாக்கிங் பதிவு.

- Advertisement -

மீரா மிதுன் மீது கலகத்தைத் தூண்டும் வகையில் பேசுதல், வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், அவர் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தன்னை ஒன்னும் பண்ண முடியாது, என்னை கைது செய்வது என்பது கனவில் தான் நடக்கும் என்று திமிராக பேசி வீடியோ வெளியிட்டு இருந்தார்.

இப்படி ஒரு நிலையில் தன்னை கைது செய்ய முடியாது என்று சவால்விட்ட மீரா மிதுனை போலீசார் தேடி வந்த நிலையில் அவர் தலைமறைவாக இருந்து வந்தார். இப்படி ஒரு நிலையில் கேரளாவில் தனது காதலர் கலர் குஞ்சியுடன் பதுங்கி இருந்த மீரா மிதுனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவரை கைது செய்ய முயன்ற போது போலீசிடம் தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டியுள்ளார்.

-விளம்பரம்-

தன்னை கைது செய்தால் அங்கேயே கத்தியை எடுத்து குதிக்கொள்வேன் என்றும் தனது காதலர் கலர் கோழி குஞ்சிடம் கத்தியை எடுக்க சொல்லியும் ஆர்ப்பாட்டம் செய்துள்ளார் மீரா. மேலும், ஒரு பெண்ணுக்கு இப்படி தான் நடக்குமா என்று முதலமைச்சர் அவர்களே என்று புலம்பியுள்ளார். கைது செய்யப்பட்ட மீரா மிதுன்  சென்னை அழைத்துவர போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.

Advertisement