பொருட்களை காணவில்லை – மீரா மிதுன் உள்ளிட்ட 6 பேர் மீது புகார் (அடங்கமாட்டாங்க போல)

0
298
meera
- Advertisement -

சோசியல் மீடியாவில் சர்ச்சைக்கு பெயர் போனவர் திகழ்பவர் நடிகை மீரா மிதுன். மாடலிங்கில் தன்னுடைய பயணத்தை தொடங்கிய இவர் ஒரு சில படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீரா கலந்து கொண்டிருந்தார். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவருடைய செயல்களால் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் தேவையில்லாமல் பிரபலங்களையும் மக்களை குறித்தும் அவதூறாக பேசியதால் போலீசார் அவரை கைது செய்து இருந்தார்கள்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is meera-midhun-peya-kaanom-2.jpg

ஜாமினில் வெளியில் வந்த மீரா

சமீபத்தில் தான் இவர் ஜாமீனில் இருந்து வெளியே வந்தார். இதனிடையே இவர் பேய காணோம் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். குளோபல் எண்டர் டெயின்மெண்ட் பட நிறுவனம் சார்பில் தேனி பாரத் R. சுருளிவேல் படத்தை தயாரிக்கிறது. மேலும், இந்த படத்தில் கௌசிக், சந்தியா ராமச்சந்திரன், கோதண்டம், ஜாக்குவார் தங்கம், ஜெயா டிவி ஜேக்கப், வி.கே.சுந்தர், செல்வகுமார், ஜெய்சங்கர், துரை ஆனந்த், ரவி, விக்கி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

- Advertisement -

ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து எஸ்கேப்

இந்த படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் திடீரென ஒருநாள் இரவில் மீரா ஒன்னும் சொல்லாமல் அங்கிருந்து எஸ்கேப் ஆகி இருக்கிறார் என்று இயக்குனர் செல்வ அன்பரசன் புகார் அளித்திருக்கிறார். இது குறித்து அவர் கூறியிருப்பது, இந்த படத்தில் கதாநாயகியாக மீராமிதுன் நடித்திருக்கிறார். இவர் ஜெயிலில் இருந்து வந்தவுடன் முதலில் சென்னையில் படப்பிடிப்பை துவங்கினோம்.

meera

பொருட்களை காணவில்லை :

அதன் பின் இறுதி கட்ட படப்பிடிப்பை கொடைக்கானலில் நடத்த திட்டமிட்டு அதற்காக படக்குழுவினர் அனைவரும் கொடைக்கானல் சென்று படப்பிடிப்பை நடத்தினோம். மேலும், படப்பிடிப்பு முழுவதும் முடிந்து இரண்டு நாட்கள் உள்ள நிலையில் திடீரென மீராமிதுன் நள்ளிரவில் 6 பேர் கொண்ட குழுவுடன் தனது உடமைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓடிவிட்டார். அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் இருந்த பொருட்களை எடுத்துச் சென்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

-விளம்பரம்-

புலம்பிய இயக்குனர்

மறுநாள் காலையில் தான் மேனேஜர் இந்த விஷயத்தை என்னிடம் சொன்னார். மொத்த படக்குழுவும் அதிர்ச்சி அடைந்து விட்டோம். பேயை தேட போய் கடைசியில் நாங்கள் எங்களது கதாநாயகியை தேட வேண்டிய சூழல் வந்துவிட்டது. பின் தயாரிப்பாளர் என்னிடம் தற்போது என்ன செய்யப் போகிறீர்கள்? என்று கேட்டார். இத்தனை தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பை மீராமிதுன் மதிக்காமல் சென்று விட்டார்.

அவர் இல்லை என்றாலும் பரவாயில்லை நான் காட்சிகளை வேறு விதமாக எடுத்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு படத்தை எடுத்தேன். உண்மையாலுமே எங்களை விட அந்த ஆறு பேரை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது. பிறகு நாங்கள் படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டு சென்னைக்கு திரும்பி விட்டோம். தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. விரைவில் இந்த படம் திரையரங்கில் வரும் என்றும் கூறியிருக்கிறார்.

Advertisement