நானும் முகெனும் நெருக்கமா இருக்கிற மாதிரி வீடியோ போடு.! மீரா மிதுனின் அடுத்த ரகசிய ஆடியோ.!

0
4841
Meera-mithun

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வணிதாவிற்கு பின்னர் அதிகம் வெறுக்கப்பட்டது மீரா மிதுன் மட்டும் தான். சொல்லப்போனால் வனிதாவை விட மீரா மிதுன் தான் அதிகம் வெறுக்கப்பட்டார். கடந்த சில வாரத்திற்கு முன்னர் (ஜூலை 28) மீரா மிதுன் வெளியேற்றப்பட்டது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மீரா மிதுன் பிக் பாஸ் வீட்டில் இருந்த போது சரண் தன்னை தப்பான இடத்தில் தொட்டார் என்று குற்றம் சாட்டினார். ஆனால், சேரன் விஷயத்தில் மீரா தான் பொய் சொல்கிறார் என்று கமல் போட்டு காண்பித்த குறும்படம் மூலம் அப்பட்டமாக நிருமானமானது. இருப்பினும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னரும் உண்மை ஒரு நாள் வெளியில் வரும் என்று புலம்பிக்கொண்டு தான் இருக்கிறார் மீரா.

இதையும் பாருங்க : வெளியேறிய அடுத்த நாளே தர்ஷனுக்கு சினிமா வாய்ப்பு.! தயாரிப்பு நிறுவனம் போட்ட ட்வீட்.!

- Advertisement -

ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய மீரா மிதுன், அவரது தோழர் ஒருவருடன் உரையாடும் ஆடியோ ஒன்று வெளியாகினது. அந்த ஆடியோவில் சேரன் பெயரை கெடுக்க திட்டம் தீட்டினார் மீரா. இன்று மீரா மிதுன் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் மீரா மிதுன் தன்னை நல்லவர் என்று காட்டிக்கொள்ள முகென் மற்றும் தானும் நெருக்கமாக இருப்பது போல விடியோவை தயார் செய்து அதனை சமூக வலைத்தளத்தில் வெளியிடுமாறு ஒருவருடம் மீரா பேசும் ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement