உள்ளாடை இல்லாமல் படு மோசமான போஸ். தீபாவளியதுவுமாக வாங்கி கட்டிகொண்ட மீரா மிதுன்.

0
74348
Meera-mithun
- Advertisement -

விஜய் தொலைக்காகியில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நிறைவடைந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனின் ரசிங்கர்களுக்கு பல்வேறு பரிட்சயமான பல்வேறு நபர்கள் கலந்து கொண்டு இருந்தனர். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி ரசிகர்களுக்கு ஒரு பரிட்சியமான போட்டியாளராக பிக் பாஸ் வீட்டில் வைல்ட் கார்ட் போட்டியாளராக நுழைந்தவர் நடிகை மீரா மிதுன். மாடல் அழகியான இவர் 2016 ஆம் ஆண்டு மிஸ் சவுத் அழிகியாவார்.

-விளம்பரம்-

ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவர் கலந்துகொள்வதற்கு முன்பாக அழகி பட்டத்தை வைத்து மோசடி செய்ததாக இவரிடம் இருந்து அழகி பட்டம் பறிக்கப்பட்டது. மேலும், 2016 ஆம் ஆண்டு இவர் அழகி பட்டத்தை வென்ற அதே போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்த நடிகையும் தர்ஷனின் நெருங்கிய தோழியான சனம் ஷெட்டிக்கு அந்த அழகி பட்டம் வழங்கப்பட்டது. ஆனால், அழகி பட்டம் பறிபோன பின்னரும், நான் தான் மிஸ் இந்திய சவுத் என்று கூவிக்கொண்டு வருகிறார் மீரா மிதுன்.

இதையும் பாருங்க : விஸ்வாசமா ? பிகிலா ? நம்ம கேப்டன் விஜயகாந்துக்கு பிடிச்ச கிளைமாக்ஸ் இது தானாம்.

- Advertisement -

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பாகவே மீரா மிதுன் 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் ஒரு சில காட்சிகளில் மட்டும் தோன்றியுள்ளார். ஆனால், படங்களில் நடித்து இவருக்கு கிடைத்த பிரபலத்தை விட சர்ச்சைகளில் சிக்கி இவருக்கு பிரபலம் கிடைத்தது தான் அதிகம். மீரா மிதுன், அழகி என்ற பெயரில் பலரை ஏமாற்றி பணம் பறித்ததாக ஜோ மைக்கல் என்பவர் தொடர்நது குற்றம் சாட்டி வந்தார். ஆனால், பிக் பாஸ் வீட்டிற்குள் மீரா வந்த சில நாட்களில் இவருடைய லட்சணம் என்னவென்று ரசிகர்கள் புரிந்து கொண்டனர்.

மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாள் முதலே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். மேலும், பாஸ் வீட்டில் இருந்த அபிராமி மற்றும் சாக்ஷி இருவருமே இவரை தொடர்ந்து டார்கெட் செய்து வந்தார்கள். அதேபோல பிக் பாஸ் வீட்டில் மீரா மிதுன் சேரன் குறித்து கூறிய சர்ச்சையான கருத்தினால் இவர் மீது ரசிகர்களுக்கு வெறுப்பை ஏற்படுத்தியது. கடந்த சில நாட்களாகவே மீராமிதுன், பிக்பாஸ் குறித்தும் பிக் பாஸ் போட்டியாளர்கள் குறித்தும் பல்வேறு சர்ச்சையான விஷயங்களை பதிவிட்டு வருவதையும் வாடிக்கையாக வைத்து வருகிறார். மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த மீரா மிதுன் பல்வேறு பேட்டிகளை அளித்து வருகிறார். ஆனால், அதிலும் தான் செய்த தவறை ஒப்புக்கொள்ளாமல் இருந்து வருகிறார்.

-விளம்பரம்-

அதே போல தண்ணி அடிப்பது, புகைபிடிப்பது, ஆணுடன் பார்ட்டியில் நடனமாடுவது போன்ற பல்வேறு புகைப்படங்களையும் விடீயோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் அடிக்கடி பதிவிட்டு வருகிறார் மீரா மிதுன். இந்த நிலையில் தீபாவளி திருநாளான இன்று (அக்டோபர் 27) மீரா மிதுன் தனது ட்விட்டர் பக்கத்தில் உள்ளாடை அணியாமல் படு மோசமான ஆடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதிலும் அந்த புகைப்படத்தில் 16 வயதினிலே படத்தில் ஜோதிகா பேசும் வசனத்தை ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார். ஆனால், இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மீரா மிதுனை கழுவி ஊற்றி வருகின்றனர்.

Advertisement