விஸ்வாசமா ? பிகிலா ? நம்ம கேப்டன் விஜயகாந்துக்கு பிடிச்ச கிளைமாக்ஸ் இது தானாம்.

0
8096
viswasam-bigil
- Advertisement -

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள பிகில் படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. உலகமே பிகில் படம் திரையரங்குகளில் வெளியானதை தொடர்ந்து திருவிழா போன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறார்கள். மேலும்,விஜய் ரசிகர்கள் பயங்கர ஆர்பாட்டத்திலும், உற்சாகத்திலும் தியேட்டர்களில் பட்டைய கிளப்புகிறார்கள். இதனைத்தொடர்ந்து இயக்குனர் அட்லியும், விஜய்யும் இந்தப் படத்தில் மூன்றாவது முறையாக இணைகிறார்கள். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து உள்ளார். இவர்களோடு விவேக், கதிர், ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, ஆனந்த்ராஜ், யோகிபாபு ஆகிய பல நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்டமான பொருட்செலவில் பிகில் படத்தை தயாரித்து உள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தே.

-விளம்பரம்-
Image result for viswasam climax"

பிகில் படம் 180 கோடி ரூபாய்க்கு மேல் தயாராகி இருக்கும் படம் என்று கூறப்படுகிறது. மேலும்,ஏ.ஆர். ரகுமான் அவர்கள் இசையமைத்துள்ளார். இந்த பிகில் படம் முழுக்க முழுக்க பெண்களின் ‘கால் பந்தாட்டத்தை’ மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாகும். அதுமட்டும் இல்லாமல் தளபதி விஜயின் பிகில் படம் ஷூட்டிங் தொடங்கிய நாளிலிருந்தே திரைக்கு வரும் நாள் வரை பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி இருந்த நிலையில் நேற்று பிகில் படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக வெளிவந்து தெறிக்க விடுகிறது. பிகில் படம் திரையரங்குகளில் வெளியானதை தொடர்ந்து சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் பிகில் படம் குறித்து கருத்துகளை பதிவிட்டு தெரிவித்து வருகின்றனர்.

இதையும் பாருங்க : முதன் முறையாக தனது இரண்டு மனைவி மற்றும் மகனுடன் போஸ் கொடுத்த சரவணன். வைரலாகும் புகைப்படம்.

- Advertisement -

மேலும்,நம்ம தளபதி அவர்கள் இந்த தீபாவளிக்கு பிகில் படம் மூலம் சரவெடிய போட்டு ரசிகர்களை வெறித்தனமாகி உள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது. மேலும்,விஜய்யின் பிகில் படம் உலகம் முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று வருகின்றது. மேலும், பிகில் படம் குறித்து சமூக வலைத்தளங்களில் கலவையான விமர்சனங்களை தந்து வருகின்றனர் ரசிகர்கள். மேலும் பிகில் படம் பெரிய அளவு மாஸ் படமாக இருந்தாலும் அந்த படத்தில் சின்னச் சின்ன குறைகள் இருப்பதாகவும், கதையின் மீது ஒரு பிணைப்பு ஏற்படுத்தாமல் போய்க் கொண்டுள்ளது என்றும் கூறினார்கள். ஆனால்,எமோஷன் காட்சிகள் படத்தில் பட்டையை கிளப்பியது என்று கூறினார்கள். இதனை தொடர்ந்து 2019ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று அஜித் நடிப்பில் வெளியான விசுவாசம் திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல பெயரை தந்து உள்ளது.

மேலும், இந்த படம் அப்பா– மகள் சென்டிமென்ட் கதையை கொண்டு உருவாக்கிய படமாகும். மேலும், அப்போது வெளிவந்த பேட்டை படத்தை விட அதிக வசூல் செய்து மாஸ் காட்டியது. அதுமட்டுமில்லாமல் விசுவாசம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளை பார்த்து கண்ணீர் சிந்தாதவர் எவருமே இருந்திருக்க மாட்டார் என்று கூறுமளவிற்கு கிளைமாக்ஸ் இருந்தது. மேலும்,விசுவாசம் படத்தில் அஜித் குமார், நயன்தாரா, விவேக், யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதனை தொடர்ந்து பிகில் படத்திலும் அப்பா- மகள் சென்டிமென்ட் கதை இருக்கிறது என்றும் கூறுகிறார்கள். இந்நிலையில் சினிமாத்துறையில் நடிகரும், பிரபலமான அரசியல்வாதியுமான கேப்டன் விஜயகாந்த் அவர்கள் விசுவாசம் vs பிகில் ஆகிய இரு படங்களில் எந்தப் படத்தின் கிளைமாக்ஸ்? உங்களை மிகவும் கவர்ந்துள்ளது என ரசிகர்கள் கேள்வி கேட்டு எழுப்பி உள்ளார்கள்.

-விளம்பரம்-

இதோடு ட்விட்டரில் ஒரு ரசிகர் எழுப்பிய கேள்வியில் ‘விசுவாசம் படத்தின் கிளைமாக்ஸ் உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் செய்ய வேண்டும் என்றும், பிகில் படத்தின் கிளைமாக்ஸ் சூப்பர் என்றால் RT செய்யவேண்டும்’ என்றும் கேட்டிருந்தார். உடனே அதற்கு கேப்டன் விஜயகாந்த் அவர்கள் லைக் செய்து உள்ளார். இதனைத்தொடர்ந்து விசுவாசம் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் தான் சூப்பர் ஹிட் என்று பதிலளித்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் கூறிய பதிலுக்கு ரசிகர்கள் அனைவரும் இன்ப அதிர்ச்சியாகி உள்ளனர். மேலும், அஜித் ரசிகர்கள் ‘போடுடா வெடியா” என்று தீபாவளியை அதிரடியாக கொண்டாடி வருகின்றனர்.

Advertisement