லோகேஷ் கனகராஜுக்கு இதான் வேலை, இதான் தெரியும்- மீண்டும் மீரா மிதுன் சர்ச்சை ட்வீட்.

0
1638
meera
- Advertisement -

சமூக வலை தளத்தில் கடந்த சில வாரமாக மிகவும் சர்ச்சைக்குரிய நபராக இருந்து வந்தவர் மாடலும் நடிகையுமான மீராமிதுன். மாடல் அழகியான இவர் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது என்னவோ விஜய் தொலைக்காட்சியில் சென்ற ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி தான். பிக்பாஸ் நிகழ்ச்சி க்கு முன்பே இவர் அழகிப் போட்டி என்ற பெயரில் பல்வேறு நபர்களை ஏமாற்றியதாக ஜோ மைக்கல் என்பவர் குற்றம் சாட்டி இருந்தார். அது போக இவர் மீது ஒரு சிலர் காவல் நிலையத்திலும் புகார் அளித்திருந்தார்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில்தான் பிக்பாஸில் கலந்து கொண்டார் மீராமிதுன். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்தபோது சேரன் தன்னை தவறான இடத்தில் பிடித்து தள்ளி விட்டார் என்று இவர் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும்இவர் டுவிட்டரில் அடிக்கடி சரியான விஷயங்களை பதிவிட்டு வந்தார். அதிலும் கடந்த சில வாரமாக ஹோலிவுட்டு மாபியா என்ற பெயரில் சூர்யா மற்றும் விஜய் குறித்து அவதூறாக பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார் மீரா.

- Advertisement -

சமீபத்தில் மீரா மிதுன் இறந்துவிட்டார் பிரேத பரிசோதனை மற்றும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று மீரா மிதுன் ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்று போடப்பட்டிருந்தது.ஆனால், தனது ட்விட்டர் ஹேக் செய்யப்பட்டுவிட்டது என்று கூறி யிருந்த மீரா சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் மற்றும் கமல் கூட்டணியில் வெளியான எவனென்றுநினைத்தாய் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கேலி செய்து உள்ளார்.

அதில், லோகேஷ் கனகராஜுக்கு இதான் தெரியும். எப்படி மாஸ்டர் படத்தின் போஸ்டரை காப்பி அடித்தாரோ. அதே போல இந்த படத்தின் போஸ்ட்டரையும் காப்பி அடித்துள்ளார். அவருக்கென்று சுய சிந்தினை எல்லாம் கிடையாது என்று பதிவிட்டுள்ளார். ஏற்கனவே மாஸ்டர் படத்தின் போஸ்டர் வெளியான போது அது தன்னுடைய புகைப்படத்தை பார்த்து விஜய் காப்பி அடித்துவிட்டார் என்று கூறியிருந்தார் மீரா மிதுன்.

-விளம்பரம்-
Advertisement