புதிய முதல்வர் ஸ்டாலினுக்கு மூன்று பக்க அறிக்கை வெளியிட்ட மீரா மிதுன். என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

0
960
meera
- Advertisement -

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றதை அடுத்து தமிழகத்தின் அடுத்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பு ஏற்க உள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்றது. தமிழ்நாட்டின் இரண்டு முக்கிய தலைவர்கள் ஜெ. ஜெயலலிதா, மு. கருணாநிதி ஆகியோரின் இறப்பிற்குப் பின்னர் தமிழ்நாட்டில் நடைபெற்ற முதலாவது சட்டமன்றத் தேர்தல் இதுவாகும். அதே போல மக்கள் நீதி மய்யம், அம்மா மக்கள் கட்சி என்று பல்வேறு புதிய கட்சிகளும் தேர்தலில் களம் கண்டனர்.

-விளம்பரம்-

இந்த தேர்தலில் திமுக கட்சி மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியில் அமருகிறது.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை, வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற இலயோலா கல்லூரி வளாகத்தில் பெற்றுக் கொண்டு, மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி ஆகியோரது நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செலுத்தினார்.

- Advertisement -

முதன் முறையாக முதலமைச்சராக பதிவு ஏற்கப்போகும் ஸ்டாலினுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் ஸ்டாலின் வெற்றி பெற்றதுக்கு மீரா மிதுன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், இதை புரிய வைக்க முயன்ற போதெல்லாம் பைத்தியமாக பாதிக்கப்பட்டேன் செய்தி இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களால் ஏனெனில் உலகில் எங்கும் இருந்திராத தன் மக்கள் மீதே அந்த மக்கள் கொள்ளும் காழ்ப்புணர்ச்சி தமிழகத்தில் தலைதூக்கியுள்ளது.

இதற்கு தமிழக மக்களின் அறியாமையும் தேசிய உலகளவிய அளவில் ஒரு தமிழ் பெண்ணின் வெற்றி தமிழக மீடியாக்களால் மறைக்கப்பட்டும் மாற்றப்பட்டதும் தான் அதே சமயம் நான் ஏற்படுத்திய தாக்கம் என் தனிப்பட்ட வாழ்வு தவறாய் சித்தரிக்கப்பட்டு நான் கேலிப் பொருளாக ஆக்கப்பட்டு இருள் எனும் போர்வைக்குள் இத்தனை நாளாய் ஏதும் அறியாமல் இருந்துவிட்டேன.

-விளம்பரம்-

அரசியலிலும் மக்கள் வாழ்விலும் வெளிச்சம் ஏற்றுவேன் என்று நம்பிக்கையோடு அன்று விடியலை நோக்கி ஆரம்பித்து நேற்றுவரை விடியல் தரப்போகிறேன் என்று தீர்க்கமாக சொல்லியே இன்று அந்த வீடுகளை நீங்கள் கண்டு உள்ளீர்கள் ஆனாலும் பூச்சிகளும் சொந்தங்களும் பாசங்களும் பதவியும் ஆசையும் அறியாமையும் பணம் பகட்டு வாழ்க்கையும் என் எண்ண ஓட்டம் உள்ள மனிதர்கள் உங்களை சுற்றி இருக்கின்ற இப்போது உங்கள் கொள்கைக்கு மாறாக இருப்பவர்கள் ஜோதிட சாஸ்திர ரீதியாக உங்களுக்கு அந்த வாய்ப்பில்லை யோகம் இல்லை என மட்டம் தட்டி உங்கள் மரியாதையை மறைத்துக் காட்டிய போதும் நீங்கள் அன்றாடம் உங்கள் மனதுக்குள் வெளிச்சம் ஏற்றி முடியும் என்று நம்பி வாழ்ந்து வந்ததால் தான் இத்தனையும் செய்து காட்ட முடிந்தது பெண்களின் உரிமைகள் பாதுகாப்பிற்கும் வளர்ச்சிக்கு ஆவண செய்வேன் என்று சொல்லி இருக்கிறீர்கள்

Advertisement