தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமா திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான்.நடிகை நயன்தாரா சினிமா திரை உலகில் முன்னதாக கவர்ச்சி தோற்றத்தில் நடித்து இருந்தாலும், இப்போது கதைக் களத்திற்கு ஏற்றவாறு தோற்றத்தில் தான் நடித்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை நயன்தாரா, ஆர்ஜே பாலாஜி இயக்குணராக களமிறங்கி இருக்கும் மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். நயன்தாரா இந்த படத்தில் அம்மன் வேடத்தில் நடிக்கிறார் என்று பல எதிர்ப்புகள் கிளம்பியது. இப்படி ஒரு நிலையில் நடிகை மீரா மிதுன், தனது ட்விட்டர் பக்கத்தில் திருமணமான ஒரு ஆணுடன் உறவில் இருந்த ஒரு பெண் தற்போது ஹிந்து கடவுள் அம்மன் வேடத்தில் நடிக்கிறார். அவருக்கு அம்மன் என்றால் யார் என்றாவது தெரியுமா ? இதுபோன்ற வெட்கமில்லாமல் ஹிந்து கடவுளை கொச்சைப்படுத்துவது தமிழகத்தில் இருக்கும் கோலிவுட் மக்களால் மட்டும்தான் முடியும். தமிழ் தலைவர்கள் இதற்கெல்லாம் வாய் திறக்க மாட்டார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்
கடந்த சில மாதத்திற்கு முன்னர் மீரா மிதுன், கண்ணாடி செல்ஃபீ புகைப்படம் ஒன்றை பதிவிட்டி இருந்தார். அதில் அவருடைய செல் போனின் சிகப்பு நிற கவர் தெரியும்படி போஸ் கொடுத்து இருந்தார். மேலும், அந்த புகைப்படத்தில், என்னுடைய செல் போன் கவரை கூடவா காப்பி அடிப்பார்கள். படிக்காத நடிகை மட்டுமே இந்த வகையான அனைத்தையும் செய்கிறார். உங்களுக்கு என்று ஒரு வாழ்க்கையை பெறுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும், அதே பதிவில் அடுத்த முறை காப்பி செய்தால் அதில் இதற்கு முன்னோடியாக இருந்தது மீராமிதுன் தான் என்று குறிப்பிட வேண்டும் இல்லையென்றால் இந்த காப்பி கேட் யார் என்பதை நான் தெளிவான விவரத்தை கொடுத்துவிடுவேன்.
எவ்வளவு திட்டினாலும் சூடு சொரணை இல்லையா பாலிவுட்டில் இருந்து கோலிவுட் வரை வெட்கமே இல்லாம காப்பி என்று குறிப்பிட்டுள்ளார் மீரா மிதுன்.மீரா மிதுனின் இந்த பதிவிற்கு ஏற்றார்போல நடிகை நயன்தாராவின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலானது அதில் மீராமிதுன் குறிப்பிட்டது போலவே சிகப்பு நிற செல்போன் கவரை பயன்படுத்தி நயன்தாரா புகைப்படத்தை எடுத்து இருக்கிறார் நயன்தாரா எனவே மீராமிதுன் நயன்தாராவை தான் இப்படி குறிப்பிட்டு இருக்கிறாரா என்ற சந்தேகம்அப்போது பலர் மனதில் எழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.